கிண்ணியா: கிண்ணியாவில் சேகரிக்கப்படும் கழிவுகளை பயனுள்ளதாக மாற்றும் நடவடிக்கை கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பைசல் நகர் பிரதேசத்திலுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கான காணியில் சேகரிக்கப்படும் கழிவுகள் பிரிக்கப்பட்டு மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் கட்டிடத்திற்கான அடிக்கல் ஜெய்கா திட்டத்தினூடாக அண்மையில் நாட்டப்பட்டது.
அதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அவற்றினை நகரபிதா தலைமையில் பார்வையிடுவதற்காக இன்று உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ரணவக்க மற்றும் உள்ளுராட்சி ஆணையாளர் உதயகுமார், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் குணநாதன், உள்ளுராட்சி அபிவிருத்தி பொறியியலாளர் கௌரிபாலன், சீ.சீ.டி உத்தியோகத்தர், நகரசபை செயலாளர் யாழினி நரேந்திநாத், தொழிநுட்ப உத்தியோகத்தர் சசிதரன் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பைசல் நகர் திண்மக்கழிவு முகாமைத்துவததிற்கான நிலைய கட்டுமான வேலைகளை பார்வையிட்டனர்.




Leave a comment