மீள் குடியேற்ற பிரதேச வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைப்பு.

L1100174– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள் குடியேற்றப் பிரதேசங்களான மஜீட் கிராமம் மற்றும் ஹிஸ்புல்லாஹ் நகர் ஆகிய பிரதேசங்களில் வாழும் வறிய மக்களுக்கு புனித றமழான் மாதத்தினையொட்டி ஸ்ரீலங்கா ஹிறா பௌவுன்டேசனின் நிதி ஒதுக்கீட்டில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் உலர் உணவுப் பொருட்கள் அப்பிரதேசங்களுக்குச் சென்று அம் மக்களுக்கு நேரடியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது.

ஹிறா பௌவுன்டேசனின் இலங்கைக்கான பணிப்பாளர் அஸ்ஷெக்.எம்.மும்தாஸ் தலைமையில் இடம் பெற்ற இவ்வைபவத்தில் பொருளாதார பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ்வுதவிகளை  வழங்கிவைத்தாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடக இணைப்பாளர் எம்.எஸ்.எம்.சஜி தெரிவித்தார்.

L1100180L1100193L1100186L1100180L1100184

Published by

Leave a comment