பக்தாத்: சுன்னி, குர்திஸ் ஆகிய மார்க்க முரண்பாடுகள் காரணமாக கடந்த இருநாட்களாக ஈராக்கில் இடம்பெரும் இவ்விரு இயக்கங்கங்களின் இரத்தம் சிந்தும் வேட்டைக்கு இதுவரைக்கும் 76 பேர்கள் பலியாகி இருக்கின்றனர். புனித ரமழான் மாதம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் இரவு பகல் என்று பாராது தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. குண்டு வெடிப்புக்கள், நேரடித் தாக்குதல்கள் மற்றும், வீதியோர துப்பாக்கிச் சூட்டுக்கள் என்பவற்றின் காரணமாக கடந்த இருநாட்களில் மாத்திரம் 70 பேர்கள் புதைகுழிக்குள் சென்றிருக்கின்றனர்.
‘இப்தார்’ வேளையில் மக்கள் நோன்பைத் திறந்துகொண்டிருக்கும் போது பாய்ச்சப்பட்ட துப்பாக்கி ரவையில் 13 பேர்கள் நோன்பாளிகளாக இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தனர். அதுமாத்திரமன்றி, பள்ளிவாயல்களிலும் குண்டுகள் வைக்கப்பட்டு மக்கள் கொல்லப்படுகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 13 கார்குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன. 76 பேர்கள்வரை கொல்லப்பட்டிருப்பதாகவும், இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும் பக்தாத் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இதற்கிடையில் நேற்று வெடிக்கப்பட்ட கார் குண்டுகளில் சில சியாக்கள் பெரும்பான்மையாக வாழும் ‘ஜிதிய்யா’, ‘கராயா’, ‘பையா’ ஆகிய ஊர்களில் வெடித்ததால் மேலும் பல அசம்பாவிதங்கள் இடம்பெறக்கூடும் என அங்கு அச்சம் நிலவி வருகின்றது.
2013ம் ஆண்டு ஆரம்பம் முதல் இன்றுவரையுள்ள சுமார் 7 மாதங்களில் மாத்திரம் 2,700 ஈராக்கியர்கள் கலவரங்களால் மாத்திரம் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாம் காட்டிய வழியில் சியா, சுன்னி என்ற வார்த்தைகளே இஸ்லாமிய மூலாதாரங்களில் இல்லாதிருக்கும் இந்நிலையில், தனது சுகபோகத்திற்காக மக்களை இன்று இந்நாடுகளில் அழித்துவருகின்றனர்.
இதன் பின்னணியில் மேலைத்தேய நாடுகள் குளிர்காய்கின்றன என்று கூறிக்கொண்டாலும், முஸ்லிம்களின் பிளவுகளை வைத்தே மேலைத்தேசம் அங்கு கால்பதித்திருந்தது என்பதையும் மறக்க முடியாது.



Leave a comment