காவி உடையில் கழிந்த ரமலான் முதல் பத்து!

moon-278x225[1]– அஹமட் ஆஸிர்

மனிதம் தொலைத்து
நீதியை மிதித்து
ஆதிக்கம் புரியுதே அநியாயம் !
– அது  ஒற்றுமை சிதைத்து தப்பெண்ணம் விதைத்து
நான் என வளரும் அகம்பாவம் !  

போதியின் நிழல்வழி துறவறம்  துப்பாக்கி ஏந்துமா !
அது மதம் கொண்ட அரசியல்
சுடச்சுட பருகிட கொலைகளை கேட்குமா !?
சதிகளை சரிகாட்டி அழிவை அணைத்த  நாசத்தை இங்கும் அழைக்குதா !?

அல்லாஹ்வின் மாளிகையில்  பன்றி வெட்டி அசிங்கமாக்கி
பல் இளித்து  நிற்கும் காவித்தோல் பிராணிகள் ஒரு புறம் !
பூட்டிய மஸ்ஜிதில் ‘இபாதத்துக்கு ‘ வழியின்றி
இடிந்து போய் தெருவில் நிற்கும் சகோதரர்கள் மறுபுறம் !?

மாட்டுத் தோலையும் எலும்புத் துண்டையும்  காரணம் காட்டி
முஸ்லிமின் தோலுரிக்க கர்ஜித்து  நிற்கும்
பசுந்தோல் போர்த்திய சிங்கங்களுக்கு
பல்லு விளக்கும் பக்குவ அரசியல் என
ரமலான் முதல் 10 நன்றே கடந்தது.

Published by

Leave a comment