மஸ்ஜிதுல் ஹைரிய்யாவிலிருந்து மஸ்ஜிதுல் அரபா வரை…

timthumb[1]– அபூ-முஜாஹித்

1984, இன்று போன்று சுட்டெரிக்கும் வெயில் கால ரமழான் மாதம் அது. ‘இஸரேலிய நாய்களே! இலங்கையைவிட்டு வெளியேறு’ என்ற வாசகங்களுடன் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் இலங்கை முஸ்லிம்களின் பிரமாண்டமான எழுச்சியில் அப்போதைய அரசாங்கமான ஐ.தே.க ஆட்டம் கண்டது.

அதனால் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனா, சிரேஷ்ட அமைச்சர்களான லலித் அதுலத் முதலி, காமினி திசாநாயக்கா உட்பட பல அரசியல்வாதிகள் திணறிப்போனார்கள் அன்றைய முஸ்லிம்களின் பேரெழுச்சியைக் கண்டு!

ஆம்! அன்று ஒருமித்த முஸ்லிம்களின் எழுச்சிக்கு பின்னர் இன்றுவரை இலங்கையில் இஸ்ரேல் காலூன்றவில்லை! அல்ஹம்துலில்லாஹ்! (இவ் அரசாங்கத்தில் காலூன்ற அதிக பிரயத்தனம்…)

இலங்கை அரசியல் வரலாற்றில் 1988ல் அரசியல் தனிக்கட்சியாக தேர்தலில் குதித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து உருவான அன்றைய இளம் அரசியல்வாதிகள் இன்றும் பல்வேறு கட்சிகளாகப் பிரிந்து தங்களை அரசாங்கத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர்.

சுமார் 30 வருடகால அரசியல் அனுபவங்களையும், சொத்து சுகங்களையும் அனுபவித்ததைத் தவிர, இலங்கை முஸ்லிம்களுக்கு இவர்களால் இன்றுவரை எந்த உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் இப்புனித ரமழானில் தனது நெஞ்சில் கைவைத்து கேட்டுப்பார்க்க வேண்டும்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 20ம் திகதி சுமார் 2000 பௌத்த பிக்குகளால் தாக்கப்பட்டு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட தம்புள்ளை ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல் விடயத்தில் ஒரு சில முஸ்லிம் அமைச்சர்களைவிட வேறு எவரும் வாய் திறக்கவில்லை! வாய்திறந்தும் பின்னர் சிலர் மூக்குடைபட்டதும் ஞாபகமிருக்கலாம்!

அதன் பின்னர் கொழும்பு, அனுராதபுரம் உட்பட நாட்டின் சில பாகங்களில் பள்ளிவாயல்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தன.

எனினும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவுக்கு இவ் அழுத்தங்களைக் கொடுத்தது, இந்த பத்திரிகை மாநாட்டை ஏற்படுத்திக் கொடுத்தது யார் என்பது அல்லாஹ்வுக்கும் குறித்த அமைப்பினருக்கும் தெரிந்த விடயம். அது மாத்திரமன்றி, தலைநகரின் ஆளும்கட்சி முஸ்லிம் பெயர்தாங்கி அரசியல்வாதிகளின் ‘காலை வாரிவிடுதல்’ போன்ற சமாச்சாரங்களும் திரைமறைவில் இடம்பெற்று ‘லோகோ’ போனால் என்ன?… இந்நாட்டில் முஸ்லிம் என்ற பெயர் இருக்குத்தானே என்றுதான் இந்த ஹலால் விட்டுக் கொடுப்பு இடம்பெற்றது.

தம்புள்ளை பள்ளிவாயல் விடயத்தில் கணடிக்க முடியாமலிருந்த இகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு, ஹலால் விடயத்தை விட்டுக்கொடுப்பதற்கு நட்சத்திர ஹோட்டலில் அருமையான ஒரு பத்திரிகை ஏற்பாட்டைக்கூட்ட வழிவகுத்தது யார்?

இலங்கை முஸ்லிம்களின் தனி அமைப்பான அ.இ.ஜ.உ கண்டிக்க வேண்டிய தம்புள்ளைவிடயம், அவர்களின் கண்ணில் படவில்லை! அதனால் கண்டிக்கவும் மனசிருக்கவில்லை!

இதன் பின்னர் இன்று மகியங்கனை அரபா ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இழுத்து மூடப்பட்டிருக்கின்றது. இதுவரை எந்த முஸ்லிம் பெயர்தாங்கி அரசியல்வாதிகளோ, முஸ்லிம் பெயர்தாங்கி அமைப்புக்களோ மகியங்கனைப் பக்கம் தலைவைத்தும் படுக்கவில்லை!

‘நான் இன்று மாலை நீர்கொழும்பில் நடைபெறவிருக்கும் ஓர் நிகழ்ச்சியில் ஜனாதிபதியுடன் மகியங்கனைப் பள்ளிவாயல் விடயமாக பேசவுளளேன்’ என்பதாக தனது அறிக்கையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

‘மகியங்கனைப் பள்ளிவாயல் விடயமாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமறு பாதுகாப்பு அதிகாரிகளைக் கேட்டிருக்கின்றேன்’ என்பதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருந்தார்.

இவர்கள் அறிக்கைவிட்ட மூன்று நாட்களுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை ரமழான் ஜூம்ஆத் தொழுகையைக்கூட தொழ முடியாத நிலைக்கு பள்ளிவாயல் இழுத்து மூடப்பட்டிருந்தது.

இப்பள்ளிவாயல் தாக்குதலுக்கு உள்ளாகி, பன்றி இறைச்சி வீசப்பட்டு, ஜூம் ஆ தொழுகையும் இடம்பெறாமல் ஓர் ஆபத்தான நிலையில் இருக்கும் இத்தருணத்தில், முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த இஸ்லாமிய அமைப்புக்களோ, அரசியல் கட்சிகளோ இதுவரைக்கும் கண்டிக்க வக்கில்லாமல் பெட்டிப்பாம்பாய் சுருண்டு கிடப்பதன் பின்னணியில், ஓர் பிரமாண்டமான அரசியல் பின்னணி இருப்பதை அப்பாவி மக்கள் அறியாதவர்கள் அல்லர்.

முஸ்லிம் அமைப்புக்களோ, அரசியல்வாதிகளோ அப்பாவி முஸ்லிம்களை பொறுமை என்ற வார்த்தையை வைத்து ஏமாற்றலாம். அல்லது உண்மையை மறைக்கலாம்.

முஸ்லிம் சமூகத்தின் அமானித உரிமைகளைப் பெற்றெடுக்க உருவாக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் அல்லாஹ்வை மாத்திரம் பயந்து, இந்நாட்டில் முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் அடாவடித்தனங்களை பகிரங்கமான முன்வந்து கண்டிக்கவேண்டும். இது காலத்தின் தேவையேயன்றி, தனது தனிப்பட சுகபோக தேவையல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.

இலங்கை முஸ்லிம்களுக்கு ஓர் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதனை எதிர்த்து முதலில் குரல்கொடுக்கவேண்டியது இஸ்லாமிய அமைப்புக்ளும், முஸ்லிம் கட்சிகளுமே என்பதை அமானிதங்களுக்குப் பொறுப்புதாரிகள் உணரவேண்டும்.

தலைநகரில் முஸ்லிம் உம்மாவின் சிந்தனையில்லாமல் உல்லாசமாகத்திரியும் அமைச்சர்களான பௌசி, அலவி, அஸ்வர், காதர் ஆகியோர் தம்புள்ளை ஹைரிய்யாவிலிருந்து, மஹியங்களை அரபாவரை காணாமல் போய்விட்டனர்.

சமாதானமாக வாழ்வதற்குத்தான் பொறுமையாக இருக்கின்றோம். எனினும் பன்றி இறைச்சியை வீசி அல்லாஹ்வின் இல்லங்களைக் கேவலப்படுத்தும் பேரின வெறியாட்ட நாய்களை வீதியில் இறங்கி கல்லடித்து விரட்ட-ஒழிக்க முஸ்லிம்களுக்கு அவ்வளவு நேரமாகாது என்பதையும் அல்லாஹ்வுக்காக உங்களுக்கும் உங்களது விசுவாசமானவர்களுக்கும் இப்புனித ரமழானில் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

அ.இ.ஜ.உ வினால் அன்று ஹலால் தொடர்பாக பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிக்கையை எமது வாசகர் ஒருவர் அனுப்பியிருந்தார். அவற்றை இங்கு இணைத்துள்ளோம்.
-அஹமட் ஆஸிர்
அன்மைகாலமாக இலங்கையில் ஹலால் தொடர்பாக எழுத்து வந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அகில இலங்கை  ஜம்இய்யத்துல் உலமா ஹலால் பிரிவு இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் முக்கிய  அறிவித்தல் ஒன்றை அன்மையில் விடுத்துள்ளது.
முஸ்லிம்களாகிய நாம் ஹலாலான உணவுகளை மாத்திரமே உண்ணவேண்டியது எமது மார்க்க கடமையாகும். இதனை இலகுவாக முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்வதற்காகவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹலால் அத்தாட்சிப்படுத்தற் பிரிவு சேவையாற்றி வருகின்றது.
ஹலால் என உறுதி செய்யப்பட்ட பொருட்களை பொதுமக்கள் இலகுவாக அடையாளங்கண்டு கொள்வதற்காகவே ஜம்இய்யா தனது ஹலால் சின்னத்தை அப்பொருட்களில் பொறிந்து வந்தது.
எனினும் இது மாற்று மத சகோதர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் அவர்களுக்கு முஸ்லிம்கள் ஹலால் உணவைத் திணிப்பதாகவும் கூறி ஹலால் தேவையொன்றால் முஸலிம்களுக்கு மாத்திரம் அதனைக் கொடுக்குமாறு வேண்டி எழுப்பபட்ட பிரச்சினையை கவனத்திற் கொண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பல்வேறு உயர்மட்டங்களோடு இது சம்பந்தமாக கலந்துரையாடல்களை நடாத்தியது.
இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உயர்பீட பௌத்த பிக்குகளோடு நடத்தப்பட்ட முக்கிய கலந்துரையாடலில் பின்வரும் இரண்டு தீர்மானங்களும் ஏக மனதாக எடுக்கப்பட்டன.
01.ஜம்இய்யாவினால் ஹலால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பொருட்களில் ஜம்இய்யாவின்  ஹலால் சின்னத்தை பொறிப்பது நிறுவனங்களின் விருப்பத்தில் விடப்படும்.
02.ஜம்இய்யா ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையை இலவசமாகச் செய்ய வேண்டும்.
மேற் கூறப்பட்ட இரண்டு தீர்மானத்துக்கமையவே ஜம்இய்யா தனது ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையை தற்பொழுது நடாத்தி வருகின்றது.
ஜம்இய்யாவினால் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட நிறுவனங்கள்,பொருட்கள் சம்பந்தமான பூரண தெளிவை முஸ்லிம்கள் பெற்றுக் கொள்வதற்காக ஜம்இய்யா 0117425225 எனும் இலக்க விஷேட தொலைபேசி சேவையொன்றை ஆரம்பித்து வைத்துள்ளது.
அச் சேவையின் மூலம் வாரத்தின் ஏழு நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 07.00மணி வரை ஹலால் சம்பந்தமான அனைத்து தெளிவுகளையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும்,ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் நிறுவனங்கள் பொருட்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பட்டியலும் நாடளாவீய ரீதியில்லுள்ள அனைத்து பள்ளி வாயல்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாவும் அவற்றினை பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை  ஜம்இய்யத்துல் உலமா ஹலால் பிரிவின் செயலாளர் அஷ்ஷெய்க் முர்ஷித் முழாபர் (ஹுமைதி) தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment