திருகோணமலை: கடந்த நான்கு வருடமாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீரப்பாசன, வீடமைப்பு நிர்மான, கிராமிய மின்சார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெரும் புனித ரமழான் மாதத்தின் இப்தார் நிகழ்வு. இவ்வாண்டும் இன ஐக்கியத்தை வலியுறுத்தி கௌரவ அமைச்சரின் ஏற்பாட்டில் எதிர் வரும் 23.07.2013ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள இந்துக் கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர், முதலமைச்சர், கிழக்கு மாகாண அமைச்சர்கள், ஆளுங்கட்சி – எதிர் கட்சி உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பாதுகாப்பு முப்படையின் அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள், பிரதேச அரசியல் பிரமுகர்கள், மதகுருமார்கள், சங்கங்கள், நிறுவனங்கள், கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் பொது மக்கள் என ஆயிரத்து ஐய்நூருக்கும் மேற்பட்டோரின் பங்கு பற்றுதலுடன் மிகவும் விமர்சையாக இப்தார் நிகழ்வு நடைபெறவுள்ளது.

Leave a comment