தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளீர் அணியின் மட்டு-நகரக்கிளையின் ஏற்பாட்டடில் தரம் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான முன்னோடி கல்விக் கருத்தரங்கு

DSCF4343(பழுலுல்லாஹ் பர்ஹான்)

பாடசாலை தரம் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான முன்னோடி கல்விக் கருத்தரங்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளீர் அணியின் மட்டக்களப்பு நகரக்கிளையின் ஏற்பாட்டடில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன்  ஆலோசனையியுடன் மட்-சிவாணந்தா தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள கட்சியின் செயற்குழு உறுப்பினர் திருமதி செல்வி மனோகரன் தலைமையில் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் பங்கேற்ற இச் செயலமர்வில் வளவாளராக ஆரம்பக்கல்வி ஆசான் திரு ஜெயக்காந்தன் கலந்து கொண்டதுடன்;

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்ணாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அக்கட்சியின் பிரதித் தலைவர் க.யோகவேள் ஆகியோரும் கலந்து கொண்டு செயலமர்வை ஆரம்பித்து வைத்தனர்.

இதில் பெரும்திரளான தரம் 5ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment