எகிப்து நாட்டின் இடைக்கால அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட விபரீதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறுபட்ட தரப்பினர்களாலும் இஸ்லாத்தை இல்லாதொழிக்கும் நிலை உருவாகுவதனைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
மின்சக்தி அமைச்சர்: நாட்டிலுள்ள பள்ளிவாசல்களே அதிகரித்த மின்சார சுமைக்கு காரணமாக அமைந்துள்ளன.
அவ்காப் அமைச்சர்: இவ்வருடம் பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
நான்கு தசாப்தங்களாக நடைபெற்றுவந்த அல்குர்ஆன் மனனப்போட்டி இவ்வருடம் நிறுத்தப்பட்டுள்ளது.
பிரிகேடியர் ஒருவர்: பள்ளிவாசலில் பஜ்ர் தொழுகையை தடைசெய்வதற்கான யோசனையை முன்மொழிந்துள்ளார்.
அல்பராதி: எகிப்தின் தேவை மதச்சார்பற்ற ஒரு நாடே.
ஹாமித் அப்துஸ் ஸமத் (எகிப்திய நாவலாசிரியர்) : சமய பாசிசம் மக்கா வெற்றியோடு ஆரம்பத்து விட்டது. இறைதூதர் ஒரு பயங்கரவாதி. இஸ்லாம் முஸ்லிம் உலகின் பிரச்சினைகளுக்கான ஒரு பகுதியே அன்றி தீர்வுக்கான ஒன்றல்ல.
இப்ராஹீம் ஈஸா ( எகிப்திய ஊடகவியலாளர்): அறிஞர் அல் ஷஃராவியை போன்று மடமைக்கு துணைபோன வேறு ஒரு மனிதனை நான் கண்டதில்லை.
“குரோதமும் பகமையும் அவர்களது வாயினாலே வெளிப்பட்டுவிட்டது. அவர்களின் உள்ளத்தில் தேங்கிக் கிடப்பது அதையம் விட பெரியது” . ஸுரா ஆலஇம்ரான் – வசனம் 11

Leave a comment