80 இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடியில் மஸ்ஜிதுல் முஸ்லிஹீன் பள்ளிவாயல் திறப்பு

L1100132– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பௌஷி மாவத்தையில் தனவந்தர் நூர்முகம்மட் ஹாஜியார் என்பவரின் சுமார் 80 இலட்சம் ரூபா நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுல் முஸ்லிஹீன் எனப்படும் பள்ளிவாயலொன்று 19-07-2013 நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின்,தலைவரும் பொருளாதார அபிவிரத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு இந்த புதிய பள்ளிவாயலை திறந்து வைத்தார்.

இப்பள்ளிவாயல் திறப்பு விழாவில் காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக்,காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான கவிமனி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி) ,அமீன் (பலாஹி),மட்டக்களப்பு மத்தி கல்வி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் கபூர் (மதனி), கா-குடி முதலாம் குறிச்சி பெரிய மீரா ஜூம்மா பளிளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் சுபைர் , காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஹாரிஸ் ஜேபி. பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடக இணைப்பாளர் எம்.எச்.எம்.சஜி மற்றும் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் புத்திஜீவிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

 புதிய பள்ளிவாயல் திறப்பு விழாவை தொடர்ந்து அப்பள்ளிவாயலில் விஷேட இப்தார் நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment