நாய் கிண்டிய
மடுவுக்குள்
நட்டிவைத்த மரங்களாய்
நமது தலைவர்கள்…
அடுப்பங்கரைப் பூனையாய்
அவர்கள்
அசந்து தூங்குகிறார்கள்…
பூனையும் – நாயும்
படுத்துறங்கும் இடமாய்
பரிணமித்துப் போனது
நமது தேசிய கட்து கட்சி..
எதையுமே
கண்டு கொள்ளாத
குறுட்டு வெளவால்களாய்
அவர்களும் – நாங்களும்..
அப்போதும் இப்போதும்…
தண்ணீரில்
தலை துவட்டிய எருமைகளாய்
இன்னும் அவர்களோடு
இணைந்திருக்கிறோம்
எதையுமே கண்டு கொள்ளாமல்..
சிங்கத்தின் கூட்டுக்குள்
சிக்கிய மானினமாய்..
தினமும்
சிதைக்கப்படுகிறது நம் சமூகம் !
பொறிக்குள் அகப்பட்ட
எலிகளாய்
குரல்வளை நசுங்குகையில்
ஆட்சி நிலைப்பதற்கு
ஆசி வழங்குகிறது நமது தலைமை..
பற்றியெரியும்
பள்ளிவாயல்களை
அறிக்கைகள் மாத்திரம்
அணைத்துவிடாது..
இருந்தபோதும்
வாலாட்டும் நாய்களுக்கு
தாலாட்டும்
ஒரு வக்கற்ற சமூகமாக
மாறிப்போனோம் நாம்…
(இக்கவிதை யாரையும் தாக்குவதற்கல்ல..)


Leave a comment