காத்தான்குடி சம்மேளன காரியாலயத்தில் ஸகாத் விண்ணப்பம் விநியோகம்

sammவிசேடநிருபர்

காத்தான்குடி: எதிர்வரும் 2014ம் ஆண்டிற்கான ஸகாத் விண்ணப்பங்கள் 2013.07.20ம் திகதி சனிக்கிழமை முதல் 2013.07.25ம் திகதி வியாழக்கிழமைவரை சம்மேளன ஸகாத் காரியாலயத்தில் பி.ப 1.00 மணி முதல் 4.00 மணிவரை விநியோகிக்கப்பட உள்ளன.எனவே தேவையுடையவர்கள் அவற்றைப் பெற்றுவிண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் யாவும் எதிர்வரும் 2013.07.31ம் திகதிக்கு முன்னர் சம்மேளன காரியாலயத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் கடந்த காலங்களில் ஸகாத் உதவிகோரி விண்ணப்பித்திருந்தும் அதைக் கிடைக்கப் பெறாதவர்களும் இம்முறை புதியவிண்ணப்பத்தைப்பெற்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்தோடு கடிதங்கள்வாயிலாக உதவிகோரியவர்களும் இவ்விண்ணப்பங்களைப் பெற்று  விண்ணப்பிக்குமாறு  வேண்டப்படுகின்றனர்.

ஸகாத் விண்ணப்பம் மூலமானகோரிக்கைகள் மாத்திரமே கருத்திலெடுக்கப்படும் என்பதை அன்புப் பொதுமக்களுக்கு அறியத்தருவதோடு இனிவரும் காலங்களில் கடிதங்கள் வாயிலாக முன்வைக்கப்படும் உதவிக் கோரிக்கைகள் எதுவும் கருத்திலெடுக்கப்படமாட்டாது என்பதைகவனத்திற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

செயளாலர்.

ப.மு.நி.சம்மேளனம்.

காத்தான்குடி

Published by

Leave a comment