மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோனுக்கும் ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக் குழுவினருக்குமிடையிலான முக்கிய சந்திப்பு

IMG_0260ஏ.எல்.எம்.தாஹிர்

கொழும்பு: மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோனுக்கும் இலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக் குழுவினருக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன் போது மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதார உதவித் திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாகவும் முறையாகவும் செய்து முடித்ததாக அமைச்சர் குணரத்ன வீரகோன் தூதுக்குழுவினரிடம் எடுத்துக் கூறினார். தொடர்ந்தும் அம்மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் அரசாங்கம் அறிந்து அவற்றை அம்மக்களுக்கு உரிய முறையில் நிறைவேற்றிக் கொடுத்து வருவதாகவும் கருத்து வெளியிட்டார். 

IMG_0236

குறிப்பாக மீள்குடியேறியுள்ள மக்களுக்கு அவர்களுடைய சொந்தக் காணிகளில் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக விசேட செயற்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

IMG_0242

அமைச்சினதும் அரசாங்கத்தினதும் செயற்பாடுகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்த ஐரோப்பிய பாராளுமன்ற குழுத்தலைவி ஜிம் லம்பேட் வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் செய்து கொடுக்க தயாராக இருப்பதாவும் அதற்குரிய திட்டவரைபை அமைச்சு தயாரித்து சமர்ப்பிக்கின்ற வேலையில் அது தொடர்பாக பரிசீலித்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாஸ மற்றும் மேலதிக செயலாளர் நயீமுதீன் ஆகியோர்களும் கலந்து கொணடனர்.

ஏ.எல்.எம்.தாஹிர்
ஊடகப்பிரிவு
மீள்குடியேற்ற அமைச்சு

Published by

Leave a comment