மட்டக்களப்பு: மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிஷன் சிவானந்தா தேசிய பாடசாலையின் தாபகர் தின ஊர்வலம் சிவானந்தா தேசிய பாடசாலை பிரதி அதிபர் தயாபரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு-கல்முனை கல்லடி பிரதான வீதியில் இடம்பெற்றது.
இதில் பாடசாலை தபாகர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவப் படம் தாங்கி மாணவர்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஊர்வலத்தில் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம்,மட்டக்களப்பு விவேகானந்தா வித்தியாலயம்,மட்-கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்,ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் ஊர்வலம் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு கல்முனை நாவற்குடா பிரதான வீதி வழியாக மீன்டும் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தை வந்தடந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தை முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் உருவாக்கியமைக்காகவும் அவரின் 66வது சிரார்த்த தினத்தை முன்னிட்டும் இவ் ஊர்வலம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment