மட்டக்களப்பு: முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 66வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை கல்லடி உப்போடை ராமகிருஷ்ண மிஷன் விபுலானந்தர் மணி மண்டபத்தில் அமைந்துள்ள சுவாமியின் சமாதிக்கு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபையின் ஏற்பாட்டில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நூற்றாண்டு விழாச்சபையின் தலைவர் பேராசிரியர் மா.செல்வராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேராசிரியர் சி.மௌனகுரு,மட்டக்களப்பு சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் மாமாங்கரசா கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்தா இசை நடனக்கல்லூரி உப வேந்தர் ந.பிரேம்குமார் ,முன்னாள் மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்ற உதவி ஆனையாளர் காஸிபதி நடராஜா , நூற்றாண்டு விழாச்சபையின் செயலாளர் ஜெயராஜா மற்றும் பெரும் திரளான பாடசாலை மாணவர்கள் ,ஆசிரிய ஆசிரியர்கள் ,சமூக ஆர்வளர்கள் என பலரும் கலந்து கொண்டு சுவாமி விபுலானந்த அடிகளாரின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
இவ் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரை நினைவு கூறும் முகமாக வருடா வருடம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment