டுபாயில் இந்திய ஓட்டுனரைத் தாக்கும் டுபாய் நாட்டவரின் வீடியோ காட்சியை படம்பிடித்து இணையத்தில் உலாவிட்டவர் கைது!

5065032[1]டுபாய்: டுபாயில் வீதிச் சண்டை ஒன்றை வீடியோ படம் பிடித்து இணையத்தில் வெளியிட்ட ஆசிய நாட்டவர் ஒருவரை ஐக்கிய அரபு இராச்சிய (UAE) காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். ஐக்கிய அரபு இராச்சிய பிரஜை ஒருவர் இந்திய ஓட்டுநர் ஒருவரைத் தாக்குகின்ற காட்சியையே அவர் வெளியிட்டுள்ளார்.

இந்திய வீடியோ காட்சியை இணையத்தில் வெளியிட்டதன்மூலம் தமது நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாகவே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாட்டுக்குள்ளும் வெளியிலும் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருந்தது.

பாரம்பரிய அரபு உடையில் தலை அங்கியைச் சுற்றிக் கட்டப்படுகின்ற கயிற்றைக் கொண்டே அந்த டுபாய் மனிதர் தாக்கியுள்ளார்.அவரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

ரமழான் புனித மாதத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் வெட்கக்கேடானது என்று ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள மக்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

முகநூலிலும், யூடியூபிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இவ் அரபியின் மோசமான நடத்தைக் காட்சியைப் பகிர்ந்து (Share) வருவதுடன், மோசமாக இடுகைகளையும், கண்டணங்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

4067431362[1]

5065032[1]

130716095107OYWG[1]

Published by

Leave a comment