தம்பட்டம்

tree-பிரகாசக்கவி

போர்முடிந்ததாய்  பெரு முழக்கம் .

குதிரை  குட்டியீன்ற யானை  முட்டை போல

 ஆங்காங்கே  தோரணங்கள்  அதன் நடுவில்  காரணங்கள்

 ஒடிந்துபோன  ஓராயிரம் வீதிகளுக்கு  ஒட்டு போட்டாயிற்று !

இடி இடித்து  மின்னல் வெட்டி  குடையும் பிடிச்சாச்சு !

காய்ந்த மரங்களுக்கு  பச்சை முலாம்  பூசப்படுகிறது !

தமிழர்  கால் உடைத்து  குளிருக்கு  குதுகலமாய் சூப்பும்  குடிச்சாச்சு !

சோனகர்  தோல் உரித்து  மத்தாளம் கொட்டலாச்சு !

பெய்யாத  பெரு மழையில்  பேய் நனைந்து

 வாந்தி வருவதாய்  தேரைகள்  தேவாரம் பாடலாச்சு !

ஆனால்  இன்னும் சுதந்திரம்  வந்து போனதாய்  

சுவடுகள் தானுமில்லை அங்கு !

Published by

2 responses to “தம்பட்டம்”

  1. ஆனால் இன்னும் சுதந்திரம் வந்து போனதாய்

    சுவடுகள் தானுமில்லை அங்கு !

    1. prahasakkavi anwer Avatar
      prahasakkavi anwer

      thanks friend

Leave a reply to mahroof Cancel reply