மதம் தின்னிகளுக்கு ஓர் மனு

kvithaiபிரகாசக்கவி

 

மதமெனும்
மலம் தின்னிகளே …

நீங்கள்
சொல் எறிந்து
பாம்பாட்டஇ
கல் எறிந்து
பேய் ஓட்டஇ
போதிமரத்து
போதனைகளின்
போதை குறைந்து போனதுவோ ?

ஆங்காங்கே
மதுக்கடை போல்
உங்கள்
சாக்கடைகள் மலிந்து போயிற்றே !

ஒருவேளை
இது !
காவி அணிந்து
ஆவி துறந்த
பாவிகளின் சுடுகாடு என்பதனால்
இந்த தடு மாற்றமோ ?

முஸ்லிம்கள்
சாந்தி மார்க்கத்தின்
சந்தன வயலில் மொட்டவிழ்ந்த
சமாதான பூக்கள் என்பதனை
எங்கள் தலைவர்கள் யாரும்
உங்களுக்கு சொல்லித்தரவில்லையா ?

நாங்கள்
கருணைக்கு
கடல் போன்றோர் என்பதனை
தயவு செய்து
உங்கள் பிள்ளைகளுக்கேனும்
சொல்லிக்கொடுங்கள் .

தொப்பிகளும் சிலுவைகளும்
பொட்டுகளின் கைகோர்த்து
காவிகளின் தோள் சாய்ந்து
பௌர்ணமி நிலா ரசிக்கட்டும் !

அந்த
நட்பெனும் நந்தவனத்தில்
நாளையேனும்
புது நாடு
பூப் பூக்கட்டும் !

– பிரகாசக்கவி – —

Published by

4 responses to “மதம் தின்னிகளுக்கு ஓர் மனு”

  1. supper..
    alhamthu lillah

    1. prahasakkavi anwer Avatar
      prahasakkavi anwer

      thank you friend

  2. முஸ்லிம்கள்
    சாந்தி மார்க்கத்தின்
    சந்தன வயலில் மொட்டவிழ்ந்த
    சமாதான பூக்கள் என்பதனை
    எங்கள் தலைவர்கள் யாரும்
    உங்களுக்கு சொல்லித்தரவில்லையா ?
    nice line

    1. prahasakkavi anwer Avatar
      prahasakkavi anwer

      thanks friend

Leave a comment