கொழும்பு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜுன் 30ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்திலேயே புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் போரத்தின் தலைவராக என்.எம். அமீனும் பொதுச் செயலாளராக றிப்தி அலியும் பொருளாளராக ஹனீபா எம். பாயிஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2013 /2013ஆம் ஆண்டுக்கான செயற்குழுவின் முதலாவது கூட்டத்தின் போது ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சிரேஷ்ட உறுப்பினர்கள் தலைமையில் இலத்திரனியல் கண்கானிப்பு, அங்கத்துவர் நலன், செயலமர்வு மற்றும் பெண்கள் விவகாரம் ஆகிய குழுக்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2012/2013ஆம் ஆண்டுக்கான ‘லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுவின் முழு விபரம் வருமாறு:
1. தலைவர்: என்.எம்.அமீன்
2. செயலாளர்: றிப்தி அலி
3. பொருளாளர்: ஹனீபா எம். பாயிஸ்
4. பிரதி தலைவர்கள்: எப்.எம்.பைரூஸ், கலைவாதி கலீல்
5. தேசிய அமைப்பாளர்: எம்.பி.எம்.பைரூஸ்
6. உப செயலாளர்கள்: ஜாவிட் முனவ்வர், எம்.எப்.றிபாஸ்
7. உப பொருளாளர்: இர்ஷாத் ஏ. காதர்
8. இணைய ஆசிரியர்: தஹா எம். முஸம்மில்
9. சட்ட ஆலோசகர்: சட்டத்தரணி ஏ.எம்.வைஸ்
10. இதழாசிரியர் குழாம்: எம்.ஏ.எம்.நிலாம் (ஆசிரியர்), மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, சாதிக் ஷிஹான்
11. செயற்குழு உறுப்பினர்கள்: றசீத் எம். ஹபீழ், அஹமட் முனவ்வர், புர்கான் பீ. இப்திகார், மும்தாஜ் ஷரூக். அஸ்கர் கான், எஸ்.ஏ.கே.பழீலுர் றஹ்மான், யூ.எல்.எம்.றியாஸ்
ஆலோசகர்கள்:
1. அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மட் (பிரதி பணிப்பாளர் – ஜாமீயா நளீமியா கலாபீடம், பேருவளை)
2. அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.யூசுப் முப்தி (செயற்குழு உறுப்பினர் – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை)
3. எஸ்.எச்.எம்.ஜெமீல் – ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி
4. முஸ்லிம் சலாஹுதீன் – தொழிலதிபர்
5. ஹில்மி அஹமட் (நிறைவேற்று பணிப்பாளர் – யங் ஏசியா தொலைக்காட்சி)
6. யூ.எம்.நஜீம் (சட்டத்தரணி)
7. எம்.ஏ. அபுல் ஹசன்
8. ஹாசீம் உமர்
![Sri-Lanka-Muslim-Media-Forum[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/sri-lanka-muslim-media-forum1.jpg?w=150&h=100)
Leave a comment