கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கு முரணாக வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தச்சட்ட விடயத்தில் வாக்களித்தார்கள் என்ற காரணத்தினால் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும், அதனூடாக அவர்கள் வகித்த பதவிகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா, ஆப்தீன் யெஹியா ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திங்கள் கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் அதியுயர்பீட கூட்டத்தில் அறிவித்ததாக செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி, எம்.பி. தெரிவித்தார்.
இந்த முடிவை அதற்கு ஒருநாளைக்கு முன்னதாகவே தலைவர் அமைச்சர் ஹக்கீம் மேற்கொண்டிருந்ததாகவும் ஹஸன் அலி, எம்.பி. கூறினார்.
சம்பந்தப்பட்ட மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் பிரஸ்தாப வாக்களிப்பு நடைபெற்ற பதற்றமான சூழ்நிலை, அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட பலவந்தம் என்பவற்றினாலேயே அவ்வாறு கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாற்றமாக அவர்கள் நடந்துகொள்ள நேர்ந்துவிட்டதாக விசாரணையின் முடிவில் தீர்மானிக்கப்பட்டதாலேயே அவர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
இந்த விடயத்தில் முழு அதியுயர் பீடமும், விசாரணை குழுவாக செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.
![slmc[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/slmc1.jpg?w=150&h=112)
Leave a comment