பௌத்த கடும்போக்கு அமைப்புக்களுக்கு எதிராக தயாராகும் ஒழுக்க நெறிக்கோவை: மூக்குடைபடப் போகும் பிரதமர் ஜயரத்தின

bothuகொழும்பு: பௌத்த தேரர்களின் நெறிமுறை மீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒழுக்க நெறிக் கோவையொன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் ஜயரத்தின தெரிவித்துள்ளார். ஒரு சில பௌத்த தேரர்கள் செய்யும் முறையற்ற செய்கை காரணமாக முழு பௌத்த சாசனத்திற்குமே இழுக்கு ஏற்பட்டு வருவதாகவும் அதனை தடுக்கும் நடவடிக்கையாகவே இந்த ஒழுக்கக் கோவை அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உடரட்ட அமரபுர நிகாயாவின் சாசன ஜோதிகா நிர்வாக சங்க சபையின் சங்க நாயக்க பதவியேற்பு நிகழ்ச்சி பேராதனை சுபோதாராம சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இதில் பிரதமர் ஜயரத்தின சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

பெரும்பாலான பௌத்த தேரர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருப்பதுடன் ஒரு சிறு பிரிவினர் செய்யும் முறையற்ற செய்கைகள் காரணமாக பௌத்த சாசனத்திற்கே இழுக்கு ஏற்பட்டுவருகிறது. அதனைத் திருத்துவதுடன் 2600 வருடம் பழைமையான புத்த சாசனத்தை பாதுகாக்கும் வகையிலும் இந்த ஒழுக்கக் கோவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு சில தேர்கள் மேற்கொள்ளும் விரும்பத் தகாத நடவடிக்கைகள் காரணமாக சமயத்திற்கும் சாசனத்திற்கும் குந்தகம் ஏற்படுவதை அவதானிக்க முடிகிறது.

bothu

பௌத்த துறவியாக வேடம் பூண்டு தவறு செய்பவர்களை தேரர்கள் எனக் கூறுவது தவறென்றே நான் கருதுகிறேன். அவ்வாறு தவறிழைக்கும் தேரர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என அலைந்து திரிவது பௌத்தர்களுக்கு இழைக்கும் அபகீர்த்தியாகும்.

எனவே அப்படியானவர்களது காவி உடையை அகற்றி சாதாரண உடையுடன் சட்டத்தின் முன் அவர்களை ஆஜர் படுத்த வேண்டுமென நான் ஒரு முன் யோசனையை அந்த ஒழுக்கக் கோவையில் முன்வைத்துள்ளேன்.

Prime-Minister[1]

இன்று வரை 2557 வருடங்களாக பௌத்த சாசனம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பாதுகாத்து வந்துள்ளது. இன்னும் 2500 ஆண்டுகளுக்கு பௌத்த சாசனத்தைப் பாதுகக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் எமக்குள்ளது என்பதை நாம் மறந்து விடக் கூடாது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ‘அண்ணன், தம்பி’ அரசாங்கத்தின் முழு ஆதரவில் இயங்கி வரும் பொதுபல சேனா, ராவணா பலய, சிங்கள ராவய போன்ற அமைப்புகள் இந்த ஒழுக்க நெறிக் கோவைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிரதமர் ஜயரத்தின இந்த விவகாரத்தில் மூக்குடைபடப் போவது நிச்சயம் என்றே அவதானிகள் தெரிவிக்கின்றனர். Jpc

Published by

Leave a comment