சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் வறிய மக்களுக்கான றமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு

osa– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் விதவைகள், அனாதைகள், மற்றும் வறிய மக்களுக்கான றமழான் உலர் உணவு விநியோகம் திட்டத்தின் கீழ் காத்தான்குடியிலுள்ள விதவைகள், அனாதைகள், மற்றும் வறிய மக்களுக்கான றமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு எதிர்வரும் 2013.07.19 வெள்ளிக்கிழமை பி.ப.4.00 மணிக்கு காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் காத்தான்குடி அன்வர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் நீதியமைச்சர் ரஊப் ஹக்கீமின் இணைப்புச்செயலாளர் றஹ்மத் மன்சூர், உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சரின் இணைப்புச்செயலாளர் ஜே.எம்.முஸ்தபா, காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு சமூகத்தில் நலிவுற்றவர்கள், விதவைகள், அனாதைகள், மற்றும் வறிய மக்கள், மாணவர்கள் உள்ளிட்டோரை இணங்கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ILMY AHAMED LEBBE

 

Published by

Leave a comment