மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக எஸ்.ராஜேந்திரன் கல்வி அமைச்சினால் நியனம்.

பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: இலங்கை  தேசிய கல்விக்கல்லூரியின் மட்டக்களப்பு கிளையின் புதிய பீடாதிபதியாக ஹட்டன் பத்தனை ‘பாத தேசிய கல்வியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் 18 வருடகாலமாக விரிவுரையாளராகவும், 12 வருட காலமாக பீடாதிபதியாகவும் கடமையாற்றி அளப் பெரிய சேவைகளை ஆற்றிய மட்டு தேசிய கல்விக்கல்லூரி பீடாதிபதி எஸ்.பாக்கியராசா ஒய்வு பெற்று செல்வதை அடுத்தே அவரின் வெற்றிடத்திற்கு புதிய பீடாதிபதியாக எஸ்.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை தனது அலுவலகத்தில் வைத்து முன்னாள் பீடாதிபதி எஸ்.பாக்கியராஜா முன்னிலையில் உத்தியோகபூர்வமாக கடமையேற்றார்.

புதிய மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக இன்று திங்கட்கிழமை கடமையேற்ற பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் இக் கல்லூரியின் மூன்றாவது பீடாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment