– வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
வவுனியா: வன்னி மாவட்டத்தின் அனைத்து துறைகளிலும் சிறந்த தலைமைத்துவத்தை வளங்கவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணியினை பாராட்டாமல் இருக்க முடியாது என்று வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் என்ரன் சோமராசா தெரிவித்தார்
வவுனியா மாவட்டத்தில் 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டமான மஹிந்தோதய பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சைவப் பிரகாச மகளிர் கல்லுாரியின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரைாயற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் கூறியதாவது –
அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமமான பணியினை செய்து வருகின்றார்.அமைச்சரை பொறுத்த வலை அவர் மாவட்டத்தின் அனைத்து துறைக்கும் தலைமை தாங்கும் ஒருவராக இருப்பதை நாம் நன்றியுடன் சுட்டிக்காட்ட வேண்டும்.
கடந்த காலங்களில் இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கு அமைச்சரால் ஆற்றப்படடுள்ள பணிகள் இம்மாவட்ட அனைத்து மக்களது விமோசனத்திற்கு இன்றியமையாதது என்றும் வலயக் கல்விப்பணிப்பாளர் மேலும் கூறினார்.
வன்னி மாவட்டடத்தில் சிறந்த கல்வி சமூகமொன்றை உருவாக்க அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுத்துவரும் பணிகள் வெற்றி பெற என்றும் எமது ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளேன் என்றும் அவர் கூறினார்.
Leave a comment