படுகொலை செய்யப்பட்ட பிரித்தானிய இராணுவ வீரரின் இறுதி அஞ்சிலியின் எதிரொலி: பள்ளிவாயலுக்கு குண்டு வைப்பு!

52232[1]-MJ

லண்டன: கடந்த மே மாதம் 22ம் திகதி லண்டன் வூல்விச் நகரின் வீதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய இராணுவ வீரரின் இறுதி இறுதி அஞ்சலியும் நல்லடக்கமும்  நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நண்பகல் இடம்பெற்றது.

இவ் இராணுவ வீரரின் நல்லடக்கத்தை தொடர்ந்து சுமார் ஒரு மணியளவில் மேற்கு மிட்லேண்ட் எனும் நகரில் அமைந்திருக்கும் ‘கன்சுல் ஈமான்’ முஸ்லிம் நலன்புரி அமைப்பின் ஜூம்மா பள்ளிவாயலைச் சூழ ஆணி குண்டுகள் (Nail Bomb) வைக்கப்பட்டிருந்தன.

இவற்றுள் பள்ளிவாயல் சுவரில் பொருத்தப்பட்டிருந்த ஒரு குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்தது. எனினும் எவரும் காயப்படவில்லை. புனித ரமழான் நோற்கப்படுவதால் ஜூம்ஆ தொழுகை நேரம் இப்பள்ளிவாயலில்  மாற்றப்பட்டிருந்தது.

52233[1]

குண்டு செயலிழப்பு படையினர், பொலிஸார் உட்பட பல அதிகாரிகள் பள்ளிவாயல் சூழலை சுற்றிவளைத்து தேடுதல் நடாத்தினர். மறைத்து வைக்கப்பட்டிருந்த சில ஆணி குண்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

மேற்படி இராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் சுமார் 6 முஸ்லிம் மத வழிபாட்டுத்தலங்கள் இவ்வாறு தாக்கப்பட்டிருக்கின்றன.

52226[1]

ஈ.டி.எல்.  எனும் ஆங்கில பாதுகாப்பு முன்னணி எனும் அமைப்பினர் மீது சந்தேகம் இருந்த போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸார் மேலதிக பாதுகாப்பையும், சுற்றி வளைப்பையும் அப்பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பள்ளவாயல், கொலை செய்யப்பட்ட படை வீரர் ரிக்கி லீ வசித்து வந்த வீட்டுக்கு சுமார் 100 மீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

52227[1]

52232[1]

Published by

Leave a comment