ரமளான் மாதத்தை முன்னிட்டு முஹிப்புர் றஸூல் சங்கத்தினால் 250 ஏழை மக்களுக்கு அத்தியவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு

– பழுலுல்லாஹ் பர்ஹான்

???????????????????????????????காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் சமூகப்பணிகளை செய்துவரும் முஹிப்புர் றஸூல் சங்கத்தினால்; புனித ரமளான் மாதத்தை முன்னிட்டு ஏழை மக்களுக்கு அத்தியவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு  செவ்வாய்க்கிழமை காத்தான்குடி -4 ஊர் வீதி முஸ்தபா ஹாஜியார் லேனில் அமைந்துள்ள அதன் தற்காலிக  அலுவலகத்தில் அமைப்பின் தலைவர் எம்.எல்.எம். ஆரிபீன் ஜே.பி தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது அதிதிகளினால் 250 ஏழை மக்களுக்கும் உலமாக்களுக்கும் அத்தியவசிய உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மௌலவி அமீன் (பலாஹி), மௌலவி இப்றாஹீம் நத்வி, மௌலவி சாஜஹான் (பலாஹி), கர்பலா பொலிஸ் அரன் பொறுப்பதிகாரி செல்வராஜா  முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், மட்டக்களப்பு முன்னாள் மாநகர சபை உறுப்பினர் என்.கே. றம்ழான், உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

???????????????????????????????

???????????????????????????????

???????????????????????????????

 

Published by

Leave a comment