மழையால் கழுவப்படும் கிரிக்கட் தொடர்கள்: இலங்கையும் இந்தியாவும் இறுதிப்போட்டியில் மீண்டும் சந்திக்கின்றன

west indies-MJ

ரினிடாட்: நேற்றிரவு, நீண்ட இரவில் விளையாடப்பட்டு, முடிவடைந்த மேற்கிந்தியத் தீவுகளின் முக்கோணத் தொடரின் லீக் சுற்றின் இறுதிப்போட்டியில், டக்ளஸ் வேர்த் லூயிஸ் முறையில் இலங்கையை இந்தியா 81 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இத்தொடர் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் இருந்து நேற்றுவரைக்கும் போட்டிகளை மழை குறுக்கிட்டது. இதனால் போட்டிகள் தாமதமாகியதும், கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இச்சுற்றுத் தொடரை நடாத்தும் தனது சொந்த நாட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்திருக்கின்றது.

இந்நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை ரினிடாட் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கின்றது. இரசிகர்களின் எதிர்பார்ப்பின்படி இலங்கையும் இந்தியாவும் இறுதிப் போட்டியில் பங்கெடுக்கின்றன.

வழமை போல் இத்தொடரின் இலக்கை இலங்கை இழக்குமா அல்லது அண்மைய வரலாற்றைக் களைந்தெறிந்து, கிண்ணத்தை வெல்லுமா என்பதை இலங்கை இரசிகர்கள் மீண்டும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

கடந்த மாதம் லண்டனில் இடம்பெற்ற ஐ.சி.சி. சம்பியன்ஸ் தொடரிலும் மழையின் தாக்கத்தால் பல போட்டிகள் பாதித்திருந்தன. இரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.

இன்று சாம்பல் கிண்ணத் தொடர் இங்கிலாந்தில் மிக விமர்சையாக இடம்பெறுகின்றது. தற்பொழுது கடும் சூடு அங்கு நிலவி வந்த போதிலும், எவ்வேளையிலும் காலநிலை திடீர் மாற்றமடையும் வழக்கம் அங்கு காணப்படுவதால் இந்த சாம்பல் கிண்ணத் தொடர் எத்தகைய முடிவினை இரசிகர்களுக்கு வழங்கப் போகின்றன என்பதும் ஓர் கேள்விக்குரியாக இருக்கின்றது.

161533[1]

Published by

Leave a comment