கொழும்பு: பீகாரின் புத்த கயாவில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததற்கு கண்டனம் தெரிவித்து இலங்கை தலைநகர் கொழும்பில் புத்த பிக்குகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பீகார் மாநிலம் புத்த கயாவில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதில் புத்த பிக்குகள் படுகாயமடைந்தனர். இது தொட்ர்பாக தேசிய புலனாய்வு முகாமை விசாரணைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் பொதுபல சேனா புத்த பிக்குகள் அமைப்பும், ராவன பலாய அமைப்பும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. கொழும்பில் இந்திய தூதரகம் அருகே ஒன்று திரண்ட புத்த பிக்குகள், இந்தியாவில் உள்ள பவுத்த மத கலாசார அடையாளங்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதில் வியட்நாமைச் சேர்ந்த சில பிக்குகளும் கலந்து கொண்டனர்.

Leave a comment