காத்தான்குடி: ஹிஜ்ரி 1434 புனித ரமழான் மாத தலைப்பிறை இன்று செவ்வாய்க்கிழமை மாலை காத்தான்குடியில் காணப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை கொழும்பு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிறைக் உறுதிப்படுத்தியுள்ளதுடன் தலைப்பிறை காத்தன்குடியிலேயே காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
குறித்த புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை காத்தான்குடியைச் சேர்ந்த காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் சபீல் (நளீமி) கண்டதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், தானும் தனது குடும்பத்தாரும் தனது வீட்டிற்கு முன்னால் வைத்து புனித ரமழான் மாத தலைப்பிறையை கண்டதாகவும், உடனே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவை தொடர்புகொண்டு இதனை தெரிவித்ததாகவும் உறுதியளித்துள்ளார்.
நேற்றைய தினம் சர்வதேச ரீதியில் தலைப்பிறை தென்படாததால் இன்றைய தினம் சர்வதேசம் முழுக்க புனித நோன்பு பிடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment