விதி மீறிய அரசியல்வாதியின் சகோதரன் மேலிட உத்தரவால் விடுதலை

trafficகொழும்பு: போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனத்தைச் செலுத்தினால் என்ற குற்றச்சாட்டால் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிரபல அரசியல்வாதியொருவரின் சகோதரர், மேலிட உத்தரவுக்கிணங்க உடனடியாக விடுதலை செய்யப்பட்ட சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறி கொழும்பு – கண்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி வாகனத்தை நிறுத்துவதற்கு பொலிஸார் மூன்று முறை முயற்சித்த நிலையிலேயே நான்காவது முறை வாகனத்தை நிறுத்தி அதன் சாரதியையும் அரசியல்வாதியின் சகோதரரையும் கைது செய்துள்ளனர்.

முதலில் பஸ்யால, கலல்பிட்டிய பகுதியில் வைத்து மேற்படி வாகனத்தை நிறுத்த பொலிஸார் முற்பட்டுள்ளனர். இருப்பினும் அந்த முயற்சி பயனளிக்கவில்லை. பின்னர், மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த போக்குவரத்து பொலிஸார், யக்கல சந்தி மற்றும் வெரல்லவத்தை போன்ற பகுதிகளில் வைத்து மேற்படி வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியுள்ளனர். இருப்பினும் அவ்வாகனம் நிறுத்தாமல் சென்றுள்ளது.

இந்நிலையில், பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், பெலும்மஹர பகுதியில் வீதித் தடை போடப்பட்டு மேற்படி வாகனம் நிறுத்தப்பட்டது.

வாகனத்தின் சாரதியையும் அதில் பயணித்துக் கொண்டிருந்த பிரபல அரசியல்வாதியின் சகோதரரையும் பொலிஸார் கைது செய்த போது மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுக்கிணங்க அவ்விருவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர். Jpc

Published by

Leave a comment