காத்தான்குடியில் பள்ளிவாசல் திறப்பு

Yourkattankudy
Yourkattankudy

பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுஸ் ஸலாமத் எனும் உஸ்மான் இப்னு மழ்ஊன் எனும் பெயரில் பள்ளிவாயல் நேற்று திங்கட்கிழமை 03.30மணியளவில் அஸர் தொழுகையுடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குவைத் நாட்டின் தனவந்தர்களின் நிதியுதவியுடன் மேர்சி லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த பள்ளிவாயல் திறப்பு விழாவில் மேர்சி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நஸ்ர் ஹஸன், மஸ்ஜிதுஸ் ஸலாமத் பள்ளிவாயல் தலைவர் கே.எம்.ஆதம் அலி, மேர்சி லங்கா நிறுவனத்தின் திட்டமிடல் முகாமையாளர் அஷ்ஷெய்க் ஹஸன் ஸைத் (நளீமி), மேர்சி லங்கா நிறுவனத்தின் இணைப்பாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் முஜீப் (நளீமி), மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான் மற்றும் புத்திஜீவிகள்,உலமாக்கள், ஊர்பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பள்ளிவாயலுக்கு நீர் குளிரூட்டும் இயந்திரமொன்றும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment