1990ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுஹதாக்களின் 23வது ஆண்டு ஞாபகார்த்த நினைவாக இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு காத்தான்குடியில்

Yourkattankudy
Yourkattankudy

பாஸி பஹ்ஜான்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் சுமார் 24 வருடங்களாக பல்வேறு சமூக பணிகளை செய்துவரும் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் 1990ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுஹதாக்களின் 23வது ஆண்டு ஞாபகார்த்த நினைவாக மாபெரும் இரத்ததான நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஐ.வை.எம். கல்வி மையத்தின் ஹூஸைனியா கிட்ஸ் கொலேஜில் இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் தலைவர் பி.எம்.எம்.மர்சூக் தலைமையில் இடம்பெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்களான டாக்டர் எச்.எம்.ஜலிலா முஸம்மில் மற்றும் டாக்டர் நிசாந்தினி ஆகியோர் கலந்து கொண்ட இவ் இரத்ததான நிகழ்வில் 100க்குப் மேற்பட்ட ஆண்கள் ,பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.

இவ் இரத்தான நிகழ்வில் இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் பிரதித்தலைவர் எம்.ஐ.எம்.ஜவ்பர் மற்றும் அதன் உறுப்பினர்கள் ,உலமாக்கள்,இளைஞர் யுவதிகள் , மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி உத்தியோகத்தர்கள் ,ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணி காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூக, கல்வி, தஃவா பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பட விளக்கம்.
காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் சுஹதாக்களின் 23வது ஆண்டு ஞாபகார்த்த நினைவாக மாபெரும் இரத்ததான நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போது மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்களான டாக்டர் எச்.எம்.ஜலிலா முஸம்மில் மற்றும் டாக்டர் நிசாந்தினி ஆகியோர் இரத்த தானம் வழங்குவோரை பரிசோதிப்பதையும்,இரத்த தானம் வழங்குவோரின் ஒரு பகுதியினரையும் மேற்படி படங்களில் காணலாம். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment