வெலிகம எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் எழுதிய ‘அருள் மழை பொழியும் ரமளான்’ நூல் வெளியீட்டு விழா

– பழுளுல்லாஹ் பர்ஹான்

வெலிகம: தென்னிலங்கை வெலிகம நகரைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் எழுதிய ‘அருள் மழை பொழியும் ரமளான்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை 13.07.2013 ளுஹர் தொழுகையின் பின் வெலிகம புதிய தெரு ரௌலதுல் அத்பால் குர்ஆன் மதரசா மண்டபத்தில் வெலிகம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரி பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஓ.பத்ஹுர் ரஹ்மான்(பஹ்ஜி) தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் சிறப்புரையை காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி முதல்வர் டப்ளியூ. தீனுல் ஹஸன் (பஹ்ஜி) நிகழ்த்தவுள்ளதுடன் நூல் அறிமுக உரையை காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.ஏ.எம்.ழபர் (பஹ்ஜி) நிகழ்த்தவுள்ளார்.

இந்நிகழ்வில் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி உப அதிபர் எம்.ஓ.பவ்ஸுர் ரஹ்மான்(பஹ்ஜி),விசேட அதிதிகளாக காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி தஹ்பீழ்ப் பிரிவு தலைமைப் பொறுப்பாளர் ஏ.டப்ளியூ.எம்.உமர்(பஹ்ஜி), வெலிகம புதியதெரு ரௌலதுல் அத்பால் குர்ஆன் மதரசா பொறுப்பாளர் அல்ஹாபிழ் மௌலவி எ.முஹம்மத்(அப்பாஸி),வெலிகம கபுவத்த பள்ளிவாசல் பிரதம பேஷ்இமாம் எம்.எம்.எம்.ஸப்ரான்(அப்பாஸி) உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Published by

Leave a comment