கொழும்பு: முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் ஆடையை தடை செய்யுமாறு பொதுபல சேனா அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. முஸ்லிம் பெண்களின் கலாச்சார உடையான நிஜாப் ஆடையை தடை செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
அண்மைய சம்பவங்களின் மூலம் முஸ்லிம் பெண்கள் தலையுடன் அணியும் இந்த ஹிஜாப்பினால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அண்மையில் முஸ்லிம் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் இந்த ஆடையை அணிந்து குற்றச் செயலில் ஈடுபட்டமை அம்பலமாகியிருந்தது.
மத ரீதியான விடயம் என்பதனால் பலர் இது குறித்து கேள்வி எழுப்புவதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட்ட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கு அறிவிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மாடுகளை உணவுக்காக அறுத்துக் கொல்லப்படவதற்கு எதிராக சிங்கள முற்போக்கு இயக்கங்கள் ஏற்கனவே அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து வருவதும், விரைவில் இலங்கையில் மாடு அறுக்கும் விடயத்தில் புதிய சட்டங்கள் வெளிவரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment