மழையால் பாதித்த இலங்கை- மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான போட்டி இன்று நடைபெறும்

Rampaul-Narine-celeb_2841403[1]ட்ரினிடாட்: இந்தியா, இலங்கை, மேற்கு இந்தியத்தீவுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டி ட்ரினிடாட் ஸ்பெயின் துறைமுகத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவர் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தார்.

இதன்படி முதலில் ஆட்டத்தை துவங்கிய இலங்கை அணியின் மஹேல ஜயவர்த்தனாவும், உபல் தரங்காவும் தலா 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழ்ந்தனர். சாந்திமால் 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியினர் 19 வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 60 ஓட்டங்களை எடுத்திருந்திருந்தனர்.

குமார சங்காகரா, லஹிரு திரிமன்னே ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்த வேளை மழை குறுக்கிட்டதால் போட்டி தடைப்பட்டது.

தொடர்ந்தும் மழை பெய்து கொண்டிருந்ததால்,  நேற்றைய போட்டிய இன்றைய தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. Ls

Published by

Leave a comment