டோஹா: தற்பொழுது இரவுப் பொழுதையடைந்திருக்கும் கிழக்காசிய நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் அபிரிக்க நாடுகளில் ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை இந்நாடுகளில் இதுவரைக்கும் தென்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.
இதனால் ஷஃபான் மாதம் 30 நாட்களைப் பூர்த்தி செய்து, நாளை இரவு அதாவது செவ்வாய்க்கிழமை இரவு ரமழான் ஆரம்பமாகிறது. இதன்படி ஷஃபான் மாதம் 30 நாட்களைப் பூர்த்தி செய்திருக்கும் உலக நாடுகளில் நாளை மறுதினம் புதன்கிழமையிலிருந்து ரமலான் நோன்பை பிடிக்குமாறு கட்டார் உட்பட மத்திய கிழக்கு நாடுகளின் ஊடகங்கள் அறிவித்திருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளிலும் புதன்கிழமையிலிருந்து நோன்பு ஆரம்பமாகிறது.
இலங்கையிலும் ரமலான் மாதத்துக்கான தலைப்பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் நாளை மாலை நாட்டிலுள்ள பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள் ஊடாக அறிவிக்கப்பட்டிருப்பதுடன், நாளை மாலை ரமலான் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டால், உரிய நிறுவனங்களுக்கு உடனடியாக அறிவுக்கும்படி பொதுமக்கள் கேட்கப்படுகின்றனர்.
![normal_DSCF1881%20Waning%20crescent%20moon,%2018%20March%202007[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/10/normal_dscf188120waning20crescent20moon201820march2020071.jpg?w=105&h=78)
Leave a comment