கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா

Yourkattankudy
Yourkattankudy

ரைஸ்

கிண்ணியா: கிண்ணியா கட்டையாறு – ஒரிகன் பாலங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அழகான தோற்றத்துடன் அமையவிருக்கும் கிண்ணியா பொழுதுபோக்கு பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது.

எழில் கொஞ்சும் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசம் இயற்கை வளங்களை அதிகம் கொண்டு விளங்குகின்றது. இதில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கிண்ணியா அமைந்துள்ளதை தற்போது காணக்கூடியதாகவுள்ளது. கிண்ணியா நகரசபைக்கு நகரபிதாவாக தெரிவான டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் கிண்ணியாவை அழுகுபடுத்தும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அதிக சுற்றுலா பயணிகளை கவரக்கூடியதாக மாறியுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் புறநெகும வேலைத்திட்டத்தின் ஊடாக கிண்ணியா நகரசபை முன்னெடுக்கும் இவ்வேலைத்திட்டம் ஒரு கோடியே 70 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவிருக்கின்றது. இப்பொழுது போக்கு பூங்காவுக்கான திட்டம் இதுவரை கண்டிராத கனவாக உள்ளது. நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மியின் சாதனைகளில் இவற்றினை மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இப்பூங்கா காணப்படுகின்றது. 

கிண்ணியா மக்களின் கனவுகளில் ஒன்றான இவ்வாரான பூங்கா நகரபிதா ஹில்மியின் மூலமாக அமையவிருப்பதானது கிண்ணியா நகரபிதாவின் கடும் முயற்சியின் பயனாக கிடைத்துள்ளது. எந்த இடத்திலும் இவ்வாரான ஒரு பெயர் சொல்லும் அளவுக்கு கிண்ணியாவில் ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கியே தீருவேன் எனச் சொல்லும் நகரபிதா ஹில்மியின் நீண்ட நாள் கனவு பூங்காவுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வடிக்கல் நாட்டு விழாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்ரம வருகைதந்து அடிக்கல்லினை நாட்டிவைத்தார். அதனை தொடர்ந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நஜீப்.ஏ.மஜீத், பிரதியமைச்சர் கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, கிண்ணியா நகரசபை நகரபிதா தேசபந்து கௌரவ டொக்டர் எம்.எம். ஹிலமி ஆகியோர் நாட்டிவைத்தனர்.

தொடர்ந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்ட நூலக மண்டபத்தில் கூட்டம் ஆரம்பமாக தலைமையுரையினை கிண்ணியா நகரசபை நகரபிதா எம்.எம்.ஹில்மி நிகழ்த்த அதைத்தொடர்ந்து முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீத், பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்ரம ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

இவ்விழாவுக்கு மாகாண சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள் ஆகியோருடன் ஏராளமான அரச பிரமுகர்கள் அரச அதிகாரிகள், திணைக்கள செயலாளர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், கல்விமான்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நகரபிதா ஹில்மியின் சாதனைத்திட்ட பூங்காவின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. இறுதியில் நகரபிதாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுச் சின்னங்கள் ஆளுநர், அமைச்சர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment