பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உலகை தம் பெரும் சாம்ராஜ்யத்தின்கீழ் வைத்திருந்த ஓர் நாடு பெரிய பிரித்தானியா ஆகும். நாம் இன்று நினைக்க முடியாத உலக நாடுகளையெல்லாம் தங்களது வீரத்தால் அடிபணியவைத்து, அந்நாடுகளில் கால்பதித்து ஆட்சிபுரிந்து வந்தது பிரிட்டன்.
பெரிய பிரித்தானியா என்றழைக்கப்பட்டாலும், இங்கிலாந்தைச் செல்வாக்குச் செலுத்திய காலணித்துவ ஓர் ஆட்சியை அதாவது ஆங்கிலயர் ஆட்சியை உலகமெங்கும் நிலைநாட்டி வந்தனர்.
ஆங்கிலயர் எனப்படும் வெள்ளையர்களுக்கு அன்று முதல் இன்றுவரை ஓர் தனிமரியாதை, அந்தஸ்து உலகமெங்கும் இன்று இருந்து வருகின்றது. இதே போல்தான் கர்வம் மற்றும் தோல்விகளைத் தாங்க முடியாத மனப்பான்மை என்பதும் அன்று முதல் இன்றும் வெள்ளையர்களிடத்தில் காணப்படும் ஓர் விடயமாகும்.
இந்தவகையில், 1800களில் அவுஸ்திரேலியாவையும் ஆங்கிலயர் ஆட்சி புரிந்து வந்தனர். தங்களது காலணித்துவ ஆட்சியை நிலை நிறுத்தினர். தோற்றத்தில் திடகாத்திரமாகவும் அழகானவர்களாகவும் இருந்த அவுஸ்திரேலியர்களை அடிமைகளாகவும் தன் ஆசைக்கும் தேவைக்கும் அடக்கியாள்பவர்களாகவும் அன்று இருந்து வந்தனர்.
ஆங்கிலயர் காலடிவைத்த அநேகமான நாடுகளில் தங்களுது நாட்டுச் செல்வாக்குகளை நிலை நிறுத்தினர். இந்தவகையில் போக்குவரத்து, மொழி, நிர்வாகம், சமயம், விளையாட்டு, கேளிக்கை இல்லங்கள் என்று கூறமுடியும்.
இங்கிலாந்தில் பிரபல்யமாகி கிராமங்களிலும் நகரங்களிலும் விளையாடப்பட்டு வந்த ஓர் விளையாட்டு கிரிக்கட் ஆகும். எனினும் செல்வந்தர்கள், துறைமார்கள், இராஜ பரம்பறையில் உள்ளோர்களால் மாத்திரமே கிரிக்கட் அன்று விளையாடப்பட்டு வந்தது.
ஆங்கிலேயர் ஆட்சிபுரிந்த நாடுகளில் தாங்கள் மைதானங்களை அமைத்து விளையாடுவதற்கு அந்நாட்டு மக்களை அடிமைகளாக பயன்படுத்தி வந்தனர். தாங்கள் அடிக்கும் பந்துகளை எடுத்துக்கொன்டு வருவதற்கும், பந்து வீசுவதற்கும் பயன்படுத்தி வந்தனர். கிரிக்கட்டில் ஆர்வமடைந்த மக்களும் ஆங்கிலயர் போல் தங்களது நாடுகளிலும் விளையாட ஆரம்பித்தனர்.
இதன்விளைவு அவுஸ்திரேலியாவிலும் ஓர் கிரிக்கட் அணி உருவானது. தங்களது தேவைக்காகவும், பொது விடு முறைதினங்கள் மற்றும் பெருநாள் காலங்களில் போட்டிகளை ஏற்பாடு செய்து ஆங்கிலயர்-அவுஸ்திரேலியர் என கிரிக்கட்டை விளையாடி வந்தனர்.
ஆங்கிலயர்களுக்கு சவால்மிக்க ஓர் அணியாக அவுஸ்திரேலியா கிரிக்கட்டில் செல்வாக்குச் செலுத்தி இருந்தது. இதனால் இருநாடுகளுக்குமிடையில் சர்வதேச ரீதியில் டெஸ்ட் போட்டிகளை ஏற்பாடு செய்து விளையாடி வருவதற்கு இங்கிலாந்து விரும்பியது.
இரு நாடுகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 1877ல் இடம்பெற்றிருந்தது. ஆனால் ஏஸஸ் (The Ashes) எனப்படும் போடடி 1888ல் அதாவது இரு நாடுகளுக்கமிடையிலான விளையாடப்பட்டிருந்த 9 சர்வதேச டெஸ்ட் போட்டிகளின் பின்னரே இடம் பெற்றது என்பது பலருக்கு தெரியாத ஓர் விடயம்.
1882ம் ஆண்டு கோடை காலத்தில் லண்டன் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் குறித்த இரு நாடுகளுக்குமிடையில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இடம்பெற்றது. அப்போது ஆங்கிலயரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது அவுஸ்திரேலியா. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த போட்டியினைக் காண்பதற்கு வந்திருந்தனர்.
முதலில் துடுப்படுத்தாடிய அவுஸ்திரேலியா 63 ஓட்டங்களுக்குள் சுருண்டது. வெள்ளையர்களெல்லாம் கர்வத்தால் கொதித்தனர். தங்களது வீரர்களைப் புகழ்ந்தனர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 101 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
தற்பொழுது முன்நிலையில் இங்கிலாந்து இருந்தாலும் அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சில் ஓர் மந்திரம் இருப்பதை பார்த்த வீரர்களும் பார்வையாளர்களும் பதட்டமடைந்தனர். எனினும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்திற்காகக் காத்திருந்தனர்.
தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடியது. எனினும் அவுஸ்திரேலியாவால் அதிக ஓட்ட எண்ணிக்கையைப் பெற முடியவில்லை. 122 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்தது. ‘மெஸ்ஸீவ்’ எனப்படும் அவுஸ்திரேலிய ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் 60 பந்துகளில் 55 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.
மிக குறுகிய ஓட்ட இலக்குடன் வெற்றியை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடவந்த இங்கிலாந்து 77 ஓட்டங்களுடன் சகல விக்கட்டுக்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் 7 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றிருந்தது.

அதுவரையிலும் கிரிக்கட்டில் எந்தத் தேர்லவிகளையம் கண்டிராத வெள்ளையர்கள் கொதித்தெழுந்தனர். ஓர் அடிமையிடம் அதவும் எங்களது நாட்டில் நாங்கள் தோற்பதா? என்று மக்கள் கொதித்தெழுந்தனர். மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையை இலகுவாக வெற்றிபெற முடியாமல் ஓர் அடிமையிடம் தோற்றதை வெள்ளையர்களால் தாங்க முடியவில்லை அன்று.
அதனால் மைதானத்திலும் சில நகரங்களிலும் சிற்சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. அன்றைய போட்டியில் பயன்படுத்தப்பட்ட கிரிக்கட் உபகரணங்களில் சிலவும், பத்திரிகைகள், அழைப்புக்கள், நுழைவுச் சீட்டுக்கள் போன்றன ஒன்றாகக் குவிக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்ன.
‘இங்கிலாந்து வீரர்கள் செத்து விட்டனர். அவர்ளின் சாம்பலை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு சென்று கடலில் கரையுங்கள். அவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையட்டும்’
என்றவாறு பின்னர் ஊடகங்கள் எழுதித் தள்ளின.
அன்ற ஓவல் மைதானத்தில் எரிக்கப்பட்ட இந்த சாம்பல்தான் இன்று வரலாற்றில் ஏஸஸ் என்று அழைக்கப்படுகின்றது.
இங்கிலாந்து-அவுஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் மாத்திரம் விளையாடும் இந்த ஏஸஸ் டெஸ்ட் தொடர் மொத்தமாக 5 போட்டிகளைக் கொண்டது. திருவிழா போல் இவ்விரு நாடுளில் இடம்பெறும் இத்தொடருக்கே கிரிக்கட் வரலாற்றில் அதி கூடிய விலையில் நுழைவுச் சீட்டுக்கள் விற்கப்படுவதும் விசேட அம்சம்.
அதைவிடவும் இங்கிலாந்தில் இப்போட்டிகள் இடம்பெறுமாயின் அதைவிடவும் விசேடமாகவும் திருவிழா போலும் இத்தொடர் இடம்பெறுவதும் மற்றுமொரு விசேட அம்சம். போட்டிகளின் ஐந்து நாட்களும் குறித்த நகரங்கள் விழாக் கோலத்தில் திகழும். ஹோட்டல்களும், உணவுச்சாலைகளும் உந்நாட்டு மற்றும் வெளிநாட்டு இரசிகர்களால் நிறம்பி வழியும்.
டெஸ்ட் போட்டிகளை வெறுப்பவர்களை டெஸ்ட் போட்டிகளின் பக்கம் கவரும் ஓர் தொடராக இந்த ஆஸஸ் இருந்து வருகிறது. மைதானம் நிறைந்த இரசிகர்களால் மிக ஆரவாரமாக இத் தொடர் இங்கிலாந்தில் இம்முறை இடம்பெறுகிறது. 90 வயதைக் கடந்த அதிக முதியவர்களும் இப்போட்டிகளை இரசிக்க வருவதும் முக்கிய விடயம்.
1882 இல் இருந்து இதுவரைக்கும் (2010-11) 66 ஏஸஸ் தொடர்கள் விளையாடப்பட்டிருக்கின்றன. விளையாடப்பட்ட இந்த 66 தொடர்களில், 31 தொடர்களில் அவுஸ்திரேலியாவும், 30 தொடர்களில் இங்கிலாந்தும் வெற்றிபெற்றிருப்பதுடன், 5 தொடர்கள் சம நிலையிலும் முடிவு பெற்றிருக்கின்றன.
சரித்திரப் புகழ்பெற்ற லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இத்தொடருக்கான டிக்கட் ஒன்றின் விலை 300 புவுண்ஸ் தொடக்கம் 800 பவுண்ஸ்வரை விற்கப்படுகிறது. இது 5 நாட்களுக்கான நுழைவுச் சீட்டின் விலையல்ல! ஒரு நாளுக்கான விலை என்பதும் அதிர்ச்சித் தகவல்.
இம்முறை இங்கிலாந்தில் இடம்பெறும் இந்தத் தொடரை இங்கிலாந்து வெற்றிபெறுமாயின், 31 தொடர்களை வென்று ஆவுஸ்திரேலியாவின் வெற்றியை சமப்படுத்தும்.
இந்த ஏஸஸ் தொடரில் அதிகூடிய ஓட்டங்களைப் (5,028) பெற்றவராக சேர் பிரட்மண் (அவுஸ்திரேலியா), அதி கூடிய விக்கட்டுக்களைப் (175) பெற்றவராக சேன் வோர்ன் ஆகிய இரு அவுஸ்திரேலிய வீரர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இரு அணிக ளுக்குமிடையிலான உலகப் புகழ்பெற்ற 2013 ஏஸஸ் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டி நாளை 10ம் திகதி இங்கிலாந்தின் நொட்டின்ஹம் பிரிட்ஜ் மைதானத்தில் இடம்பெறுகிறது.




![Investec_Ashes_Series_2012_Logo_RGB_150dpi[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/investec_ashes_series_2012_logo_rgb_150dpi1.jpg?w=534&h=288)
![mcc-members-queue-from-2-30am[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/mcc-members-queue-from-2-30am11.jpg?w=524&h=365)
Leave a comment