இவ்வருடமும் 20 மணித்தியாலங்களுக்கு மேல் நோன்பு நோற்கும் ஐரோப்பிய மக்கள்!

colombo-MJ

கடந்த சில வருடங்களாக குறிப்பாக சில ஐரோப்பா நாடுகளில் வாழும் முஸ்லிம்கள்  சுமார் 20 மணித்தியாலங்களுக்கும் கூடுதலாக ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றுவந்தனர். இதே போல் இம்முறையும் இப்பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் சுமார் 18 தொடக்கம் 20 மணித்தியாலங்கள் வரை நோன்பு நோற்கின்றனர்.

ஐரோப்பா நாடுகளில் தற்பொழுது கோடை காலம் நிலவுவதால் அதிகாலை 2:30 மணியிலிருந்து பஜ்ர் தொழுகையின் நேரம் ஆரம்பமாகிறது. சூரிய அஸ்தமனம் இரவு 9:30 இலிருந்து ஆரம்பமாகிறது. இந்நாடுகளில் இரவு 11 மணிவரை சூரிய வெளிச்சம் கிடைப்பதுடன் இஷாத் தொழுகைக்கான நேரம் இரவு 11:30 மணிக்கு  பின்னரே ஆரம்பமாகிறது.

இலங்கையைப் பொருத்தமட்டில் அதிகாலை 04:45 மணிக்கு பஜ்ர் தொழுகைக்கான நேரம் ஆரம்பமாகி, மஃரிப் தொழுகைக்கான நேரம் மாலை 06:30 மணியாக இருந்து வருகிறது.

மத்திய கிழக்கு நாடுகளைப் பொருத்தமட்டில் அதிகாலை 04:20 தொடக்கம் மாலை 07:30 மணிவரைக்கும் நோன்பு வைப்பதற்கான நேரமாக இருந்து வருகிறது. இந்நாடுகளிலும் வெயில் காலமாக இருப்பதால் சூரிய வெளிச்சம் இரவு 8 வரைக்கும் கிடைக்கின்றது.

இதே போல் கனடா, அமெரிக்கா மற்றம் ஜப்பான் மற்றும் அதனைச் சூழவுள்ள  நாடுகளில் சுமார் 16, 17 மணித்தியாலங்களும், நோர்வேயில் 20 மணித்தியாலங்களும் முஸ்லிம்கள் இம்முறை நோன்பு நோறபதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: பரந்த நாடுகளில் நகருக்கு நகரம் நேர வித்தியாசம் இருப்பதை வாசகர்கள் கருத்திற்கொள்க.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment