கொழும்பு: சர்வதேச தரவுக் கூட்டுத்தாபனம் (International Data Corporation – IDC) வெளியிட்டுள்ள 2013 மார்ச் காலப்பகுதியில் முடிவடைந்த முதல் மூன்று மாதங்களுக்கான அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் பிரத்தியேகக் கணினி விற்பனையில் Dell முதலிடத்தில் நிரற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய நான்கு விற்பனையாளர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு காலாண்டிலிருந்து மற்றைய காலாண்டில் அவர்களை விடவும் அதிகமான குறிப்பிடத்தக்க தொடர் வளர்ச்சியையும் Dell பதிவாக்கியுள்ளதுடன், நாட்டில் ஒட்டுமொத்த பிரத்தியேக கணினிச் சந்தையில் 29.2 சதவீதம் சந்தைப்பங்கினையும் Dell கொண்டுள்ளதாக IDC கூறியுள்ளது.
இதற்கிடையில் notebook கணினி விற்பனையிலும் முதல்நிலை வகிக்கும் Dell கணிசமான தொடர் வளர்ச்சியுடன் 32.7 சந்தைப் பங்கினைப் பதிவாக்கியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Desktop கணினிகளைப் பொறுத்தவரையில் 25.2 சதவீதம் சந்தைப் பங்குடன் Dell இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2012 மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான Dell பிரத்தியேகக் கணினி உற்பத்திகள் வெளிவந்துள்ளதாகவும், இது இலங்கையிலுள்ள பாவனையாளர்கள் மத்தியில் Dell வர்த்தக நாமம் அதிவிரைவாக பிரபலமடைந்துவருவதை நிரூபித்துள்ளதாகவும் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
நவீன வடிவமைப்பிலான, புத்தாக்கத்துடனான, உயர் பெறுபேற்றுத்திறன் கொண்ட உற்பத்தி வடிவங்களை Dell கொண்டிருப்பதுடன், இது வியாபார நோக்கிலான பாவ னையாளர்கள், இளம் தலைமுறை மாணவர்கள், குடும்பத்தினர் மற்றும் எப்போதும் மிகச் சிறந்ததையே விரும்புகின்ற கணினி விளையாட்டுப் பிரியர்கள் என கணினி உபயோகத்தில் ஆர்வம் கொண்டுள்ளவர்களை ஈர்க்கும் பல்வேறு உற்பத்தி வடிவங்களைக் கொண்டுள்ளது.
மிகவும் நீண்ட வரிசையிலான notebook கணினிகள், மற்றும் புதிய மொபைல் இன்ரநெட் சாதனங்களை விநியோகிப்பதில் புத்தாக்கத்துடனான அணுகுமுறையொன்றை Dell கைக்கொள்கின்றது. சேமிப்பகம் (storage) சேர்வர்கள், வலையமைப்பு (networking) மற்றும் தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவம் ஆகியவற்றின் கூட்டு இணைப்பின் மூலமாக மேம்பட்ட தரவு நிலைய எளிமை மற்றும் செயற்திறன் அனுகூலத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள உதவும்வகையில் Dell இன் தீர்வுகளும், சேவை களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
– தினகரன்
![dell-m101z-580-100[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/dell-m101z-580-1001.jpg?w=580&h=435)
Leave a comment