164 ஏ கிராம சேவகர் பிரிவில் காத்தான்குடி05 ஆற்றங்கரைப் பகுதியில் டெங்கு நோய் ஒழிப்பு சிரமதான நிகழ்வு

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆட்கொல்லி டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாக காத்தான்குடி05 ஆற்றங்கரைப் பகுதி இன்று ஞாயிற்றுக்கிழமை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

 164ஏ கிராம சேவகர் பிரிவு கிராம சேவகர் யூ.எல்.ஏ. புவாத்தின் வழிகாட்டலில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் நபீல்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எம். அமீனுல்லாஹ் ஆகியோரின் ஏற்பாட்டில் குறித்த சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது டெங்கு நுளம்பு பரவுவதற்கான பொருட்கள், அழுக்குகள், ஊத்தைகள், டின்கள், டயர்கள் அகற்றப்பட்டு சிரமதானம் மூலம் குறித்த பகுதி துப்பரவு செய்யப்பட்டது.

இதில் காத்தான்குடி 164 ஏ கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த யூ.எல்.ஏ. புவாத் மற்றும் அப்பிரிவைச் சேர்ந்த பெருமளவிலான பெண்களும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment