வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்களை இரவோடிரவாக விரட்டியடித்த தமிழீழ விடுதலைப் புலிகளும், அவர்களின் நிழலில் அரசில் தவத்தை செய்த ஆயுதக் குழுக்களும், தமிழ் அரசியல் வாதிகளும் இன்று இந்த முஸ்லிம்கள் தமது மண்ணுக்கு திரும்பி வருகின்றதை ஜீரனித்துக் கொள்ள முடியாமல் அலறுகின்ற நிலையினை காணமுடிகின்றது.
வடக்கில் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, யாழ் மாவட்டங்களில் பூரண குடிகளாக கொண்ட முஸ்லிம்கள் விரட்டப்பட்டு அவர்களது, சொத்துக்கள் சூறையாடப்பட்டு, அவற்றை ஏப்பமிட்ட பினாமிகளின் தடங்கள் இல்லாமல் போன போதும, அதற்கு வக்காலத்து வாங்கி திரியும் சில இனவாத தமிழ் இணையங்களும், தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுவருவதை காணமுடிகின்றது.
தினக்கதிர் என்னும் இணையத்தளத்தின் ஆசிரியர் ருசாங்கன் என்பவர் குறித்து இலங்கை ஊடகவியளார்கள் நன்கறிவார்கள். கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவை சீரழிக்கும் பணியினை செய்து, அதில் தோல்வி கண்ட ஒருவர்..இன்று அவர் வடக்கு முஸ்லிம்களையும், முஸ்லிம் தலைமைகளையும் அவமானப்படுத்தும் செயலில் ஈடுபட்டுவருகின்றார. அவரது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையுமில்லை. கையாளாக கூலிகளின் ஒற்றனாக இருந்து செயற்படும் ருஷங்கனுக்கு பயங்கரவாதம் தான் வாழ வேண்டும் என்பது உண்மை.
வடக்கில் தற்போது எற்படடுள்ள சூழலில் மீள்குடியேற்றம் என்பது காணல் நீராகத் தான் இருக்கின்றது.வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் இன்னும் அகதிகளாக புத்தளத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் வாழந்து வருகின்றனர்.அவர்களை மீள்குடியேற்ற எடுக்கப்படும் அனைதத நடவடிக்கைகளுக்கும் தரப்புகள் தடையாகத்தான் இருக்கின்றன.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்த கரடிக்குளி, மறிச்சுக்கட்டி, பாலக்குளி, வேப்பங்குளம், உள்ளிட்ட இன்னோரன்ன கிராமங்கள் காடுகளாக காணப்படுகின்றன. அவற்றை துப்பரவு செய்து அதில் ஏற்கனவே முஸ்லிம்கள் வாழ்ந்த தாயக மண்ணில் மீள்குடியேற வருகின்ற போது அதனை வெளி மாவட்ட முஸ்லிம்கள் குடியேற வருவதாகவும். காடுகளை அழிப்பதாகவும், மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் அவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம அனுப்பியதின் ஆரம்பம் தான் பயங்கரவாதத்துக்கு துணை போகும் தினக்கதிர் போன்ற இணையங்களின் நிலைப்பாடு என்பதும் யதார்த்தமாகும்.
முஸ்லிம்கள் தமது பிரதேசங்களில் வாழ வந்த போது அவர்களது இடங்கள் தமிழர்களால் ஆட்சி செய்யப்படுகின்றதை காணமுடிகின்ற போது, இருந்த போதும் விட்டுக் கொடுப்பை தமது பண்பாக கொண்ட முஸ்லிம்கள் அதனையும் தியாகம் செய்து அடிப்படை வசதிகளற்ற காடுகளை தேடி செல்ல வேண்டிய நிலையுள்ளது.
இந்த காடுகளும் தமிழ் மக்களுக்கு சொந்தம் என்று முட்டாள் தனமாக தினக்கதிர் இணையம் செய்து வெளியிட்டுள்ளதை நோக்கும் போது, இனவாதி யார் என்பதை உணர முடிகின்றது.அன்று இரவோடு இரவாக முஸ்லிம்களை விரட்டியடித்த பயங்கரவாதிகளிள் இரவு வழியில் முஸ்லிம்களுக்கு காணி வழங்க வேண்டிய தேவையில்லை.
காட்டுக் காணிகளை உரிய திணைக்களங்களின் மூலம் விடுவித்து காணியற்ற மக்களுக்கு வழங்குவதற்கான ஜனநாயக நடை முறை தற்போது சகல மாவட்டங்களிலும் நடை முறையில் உள்ளது..அன்னு இந்த சுதந்திரம் அதிகாரிகளுக்கும்இஇல்லை அதனை கேட்டு பெறும் உரிமை மக்களுக்கும் இல்லை என்தை இணையத்தள ஆசிரியர் ருஷங்கன் அவர்களுக்கு தெரிவித்து கொள்ளவிரும்புகின்றேன்.
அன்று தமிழ் மக்களை கொலை வெறிக்கும் காமவெறிக்கும் பயன்படுத்தியவர்கள் யாரென்று எல்லோருக்கும் தெரியும்இமுஸ்லிம்களை தேவையற்ற முறையில் சீன்றி அவர்களை வம்புக்கு இழுத்து அதில் குளிர் காயும்இவக்கற்றவனின் விமர்சனங்கள் ஒரு போதும் தமிழ் – முஸ்லிம் மக்களிடத்தில் பிளவை தோற்றுவிக்காது.உண்மையினை பேசத் தெரியாத கயவர்களின் காடைதனமான அறிக்கைகள் வெறும் ஏட்டுச் சுரக்காய் தான் என்பதை உணர்த்தவிரும்புகின்றேன்.
தமிழ் மக்களுக்கு சொந்தமான காணியினை முஸ்லிம்கள் அபகரிப்பதாக தினக்கதிர் இணையத்தளத்தின் ஆசிரியர் ருஷங்கன் எழுதியுள்ளது.அப்பட்டமான கட்டுக் கதையாகும்.தமிழ் மக்களது ஒரு அங்குல இடத்தையேனும் முஸ்லிம்கள் அபகரிக்கவில்லை என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்இருஷங்கன் போன்ற கூலிகளால் அவற்றை ஒரு போதும் உணர்ந்து கொள்ள முடியாது.
அமைச்சர் றிசாத் பதியுதீன் வட மகாணத்தை முஸ்லிம் மாகாணமாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றார் என்று வட மாகாணத்தை பற்றி தெரியாத மட்டக்களப்பை சேர்ந்த தினக்கதிர் இணையத்தள ஆசிரியர் ருஷங்கன் போன்றவர்கள் பணத்துக்காக எதையும் விற்கும் அசிங்கத்தை கொண்டவர் என்பது தான் உண்மை.
வடக்கில் முஸ்லிம் வாழ்ந்த பகுதிகளில் கௌரவமாக அப்பிரதேசத்தில் வாழும் தமிழ் சகோதரர்களுடன் வாழ்வதற்கு வருகின்ற முஸ்லிம்களை அநியாகமாக காமவெறியர்கள் என்னும் அதனால் தமிழ் மக்கள் அச்சம் கொண்டுள்ளார்கள் என்றும் கற்பனையில் கூட இரு சமூகங்களும் நிணைக்காத போது வெறியன் ருஷங்கனின் கற்பனை சக்தி உணர்வில் கலைக்கட்டிப் போயுள்ளது என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
பறிபோன வடக்கு முஸ்லிம்களின் மண்ணை மீட்டிக் கொள்வதற்கு நேர்மையான முயற்சியினை அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலானவர்கள் முன்னெடுக்கின்ற போது, அதனை தடுக்கும் மற்றுமொரு வேலையினை தினக்கதிர் (இனக்கதிர்) செய்வது கண்டனத்துக்குரியது.

Leave a comment