உலக நாடுகளில் இன்று எதிர்பார்க்கப்படும் புனித ரமழான் இரவு

crescent-moon[1]-MJ

இலங்கை மற்றும் அயல் நாடுகள் தவிர்ந்த ஏனைய உலக நாடுகளில் உத்தியோக பூர்வமான இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் இன்று 08-07-2013 ஷஃபான் மாதத்தின் 29ம் நாளாகும்.

சந்தேகத்திற்கிடமான நாளாக மேற்படி நாடுகளில் இன்றிரவு பிறை பார்க்கப்படுகின்றது. உலக இயல்பில் சூரிய அஸ்தமனத்தை முதலில் அடையும் கிழக்காசிய நாடுகளில் ரமழான் பிறை தென்படுமாயின், மலேசியா, இந்தோனேஸியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க கண்டத்தைச் சூழவுள்ள நாடுகளில் ரமழான் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டு நோன்பு நோற்று வருவது இந்நாடுகளின் வழக்கமாக இருந்து வருகின்றன.

எனினும் சில கொள்கை முரண்பாடுகளால், வேறு நாடுகளில் வாழும் சிலர், தனது தாயகத்தின் பிறைக்கணக்கின்படியே நோன்பு நோற்று பெருநாள் கொண்டாடுவதையும் ஆங்காங்கே காண முடிகிறது.

எப்படி இருந்த போதிலும் இன்றிரவு ரமழான் பிறை கிழக்காசிய நாடுகளில் தென்படுமாயின் இலங்கை, இந்தியா தவிர்ந்த, ஏனைய உலக நாடுகளில் வாழும் அதிகமான மக்கள் ரமழான் மாதத்தை அடைந்து கொள்வர்.

ரமழான் பிறை தென்படுமாயின் அதுபற்றிய விபரம் உடன் பதிவேற்றப்படும்.

Published by

Leave a comment