பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்பட்ட முஸ்லிம் மதகுருவான அபு கட்டாடா பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்காக ஜோர்தானுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் அவரை நாடுகடத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து அவர் நடத்திய சட்ட ரீதியிலான 8 வருடப் போராட்டம் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அவர் அம்மான் சென்றடைந்துள்ளார்.
பிரிட்டனில் அவர் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் காரணமாக பிரிட்டனின் வரி செலுத்துவோரின் 5 லட்சம் டொலர்களுக்கும் அதிகமான பணம் செலவாகியுள்ளது.
அபு கட்டாடாவை இறுதியாக நாட்டை விட்டு அனுப்பியதன் மூலம் தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரன் தெரிவித்துள்ளார்.
அபு கட்டாடாவிடம் இருந்து ஆதாரங்களைப் பெறுவதற்காக எந்தவிதமான சித்ரவதையும் மேற்கொள்ளப்படாது என்று உறுதி செய்யும் உடன்படிக்கை ஒன்றில் ஜோர்தான் கையெழுத்திட்டதை அடுத்து, தன்னை பிரிட்டனில் இருந்து நாடு கடத்துவதற்கு எதிராக அபு கட்டாடா மேற்கொண்ட சட்ட நடவடிக்கை தோல்வியடைந்தது.
1990 இல் ஜோர்தானில் ஒரு குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக குற்றஞ்சாட்டும் மறு விசாரணை ஒன்றை அவர் எதிர்கொள்கிறார்.
BBc

Leave a comment