காத்தான்குடி: அரசினர் ஆயர்வேத மருந்தகத்துடன் இணைந்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளை நடாத்தும் இலவச ஆயர்வேத வைத்திய முகாம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையின் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தலைமையில் செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் கிளைக் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கௌரவ அதிதிகளாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் டீ. வசந்தராஜா, காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா, காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நசிர்தீன், காத்தான்குடி ஆயர்வேத மருந்தக பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜலால்தீன், செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் கிளை செயலாளரும் சமுர்த்தி முகாமையாளருமான எம்.ஏ.எம்.சுல்மி, மஞ்சந்தொடுவாய் கிராமிய ஆயர்வேத வைத்தியசாலை வைத்திய அதிகாரி காயத்ரி முரளிதரன், எஸ்.எல்.ஆர்.சீ காத்தான்குடிக் கிளை முதலுதவி இணைப்பாளர் எம்.ஐ.எம்.சலீம் மற்றும் ஆயுர்வேத மருந்தக வைத்தியர்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
காலை 08.30 மணியிலிருந்து மாலை 04.00மணி வரை இவ் வைத்திய முகாம் இடம்பெறவுள்ளது.
இதில் பெருமளவிலான மக்கள் கலந்து பயன்பெற்றனர். இதன்போது நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான ஆயுர்வேத மருந்துக்களும் வழங்கப்பட்டன.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் இலக்குகளில் மனிதாபிமான தொண்டர் பணி எனும் இலக்கின் கீழே குறித்த வைத்திய முகாம் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





Leave a comment