காத்தான்குடி: காத்தான்குடி ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா-2013, இன்று சனிக்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் செயலாளர் நஜீர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், கெளரவ அதிதிகளாக ஜம்மியதுல் உலமா ஆயட்காலத் தலைவர் ஐ.எல்.எம். முஸ்தபா (பஹ்ஜி), இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் கபூர் (மதனி), ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் உப பொருளாளரும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவருமான எம்.ரீ.எம்.காலித் ஜேபி, பாவலர் சாந்தி முகைதீன், ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி ஆயட்காலத் தலைவர் யூசுப் ஆலிம் உட்பட அதிதிகள், ஊர் பிரமுகர்கள், புத்திஜீவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதில் வரவேற்புரையையும் தலைமை உரையையும் ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் உப பொருளாளரும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவருமான எம்.ரீ.எம்.காலித் நிகழ்த்தினார்.
இதன்போது மாணவிகளுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் உஸ்தாத்மார்கள், அதற்காக பாடுபட்டவர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.





Leave a comment