கொழும்பு: வடக்கு தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளரால் இன்று கூட்டப்பட்ட கூட்டதில் வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் வசித்துவரும் வாக்காளர்களுக்கான வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்துவது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடத்தில் கோறிக்கையொன்றினை முன் வைத்ததாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் கூறினார்.
தேர்தல் ஆணையாளர் தலைமையில் இன்று(2013.07.05) ராஜகிரியவில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இடம் பெற்ற கட்சிகளின் பிரதி நிதிகளுடனான கூட்டம் குறித்து கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தேர்தல் திணைக்களத்துக்கு தற்போது கிடைக்கப் பெற்றுள்ள 7 ஆயிரத்துக்கும் அதிகமான இடம் பெயர்ந்த வாக்காளர்களின் விண்ணப்ப படிவங்கள் ஒழுங்குப் படுத்தும் பணிகள் தற்போது இடம் பெறுவதாகவும் எதிர்வரும் 9 ஆம் திகதியுடன் அதன் காலம் முடிவடைவதாகவும்,தேர்தல் ஆணையாளர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் கூறினார்.
குறிப்பாக இடம் பெயர்ந்த மக்கள் புத்தளம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் இன்னும் வாழ்வதாகவும்,அவர்கள் வாக்களிக்க வேண்டுமெனில் வடமாகாணத்திற்கு செல்வதற்கு அதிகமான நேரம் எடுக்கும் என்பதை கவனத்திற் கொண்டு தற்போது வாழும் பிரதேசங்களில் வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தையும் தாம் வலியுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்த சட்ட மூலத்திற்கமைவாக இடம் பெயர்ந்த மக்கள் தமது விண்ணப்பங்களை கையளிப்பதற்கான ஒழுங்குகளை தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளமையினை பாராட்டிய பாராளுமன் உறுப்பினர் இன்னும் விணணபப்பங்களை கையளிக்காத வாக்காளர்கள் தமது படிவங்களை உரிய கச்சேரியில் கையளிப்பதன் அவசியத்தினையும் எடுத்துரைத்தார்.
அதே வேளை வடமாகாண சபைக்கான தேர்தல் செப்டம்பர் மாதம் இறுதியில் நடை பெறலாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்ததாகவும்,வேட்ப மனுக்கள் தமாக்கள் செய்யும் தினம் இம்மாதம் 10 ஆம் திகதிக்கு பின்னர் இருக்கம் என்றும ஆணையாளர் நாயகத்தை மேற்கோள்காட்டி பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் மேலும் கூறினார்

Leave a comment