காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆட்கொல்லி டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள்

– பழுளுல்லாஹ் பர்ஹான்

???????????????????????????????காத்தான்குடி: டெங்கு ஒழிப்பு தினம் 2013 ஐ முன்னிட்டு மட்டக்களப்பு காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆட்கொல்லி டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஜனாபா ஜெஸீமா முஸம்மில் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.சுபைர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் திரு.டீ. மிதுன்ராஜ், பாடசாலை ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தரம் 08, 09 மாணவிகளால் பாடசாலையிலிருந்து அருகிலுள்ள ஒழுங்கை வரை டெங்கு ஒழிப்பு ஊர்வலம் இடம்பெற்றது.

மாணவிகள் ‘அசுத்தத்தை இல்லாது ஒழிப்போம்’ ‘பேணுவோம் பேணுவோம் சூழலை சுத்தமாக பேணுவோம்’ ‘ஒழிப்போம் ஒழிப்போம் டெங்கை முற்றாக ஒழிப்போம்’ ‘தடுப்போம் தடுப்போம் நுளம்புப் பெருக்கத்தை தடுப்போம்’ என மும்மொழிகளிலும் (ஆங்கிலம்,சிங்களம்,தமிழ்) எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை பாடசாலை, வகுப்பறைகள், சுற்றுப்புறச் சூழல் என்பன சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

மாணவர்களுக்கு மத்தியில் டெங்கு தொடர்பில் விழப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக மில்லத் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஜனாபா ஜெஸீமா முஸம்மில் தெரிவித்தார்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment