ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை சிரமதானம் மூலம் துப்பரவு

1– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் இயங்கிவரும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித நேயம் பேனும் பாரிய  சிரமதானப் பணி இன்று வெள்ளிக்கிழமை ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.எச்.ஏ. றஷீத்  தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

காலை 06.00 மணியிலிருந்து 10.00 மணிவரை இடம்பெற்ற இவ் சிரமாதன நிகழ்வில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை அத்தியட்சகர், ஆரையம்பதி கிராம சேவை உத்தியோகத்தர் தர்மலிங்கம், கர்பலா பொலிஸ் அரண் சிவில் பாதுகாப்புக் குழு உத்தியோகத்தர்கள்,தாதியர்கள்,ஆரையம்பதி மாதர் சங்க உறுப்பினர்கள்,வைத்தியசாலை ஊழியர்கள், ஸ்டார் இளைஞர் சமூக சேவை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மனித நேயம் பேனும் பாரிய  சிரமதானத்தின் மூலம் வைத்தியசாலையின் பின் பகுதி,விடுதிப் பகுதியின் பின்புறம்,முன் நுழைவாயில் உட்பட பல இடங்கள் துப்பரவு செய்யப்பட்டன.

குறித்த ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு மட்டக்களப்பபு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆரையம்பதி,கர்பலா,சிகரம் ,ஒல்லிக்குளம் ஆகிய குக் கிராமங்களில்  பாரிய சிரமாதனப் பணிகளை செய்து வருவதோடு மட்டுமன்றி கர்பலா கிராமத்தில் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகளை  செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1

6

DSC07607

DSC07619

Published by

Leave a comment