மீலாத் போட்டியில் புனித சிசிலியா மகளிர் உயர்தர பாடசாலை மாணவி பாத்திமா பதீனா தேசிய மட்டத்திற்கு தெரிவு

fatheena– விசேட செய்தியாளர்

மட்டக்களப்பு: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தேசிய மீலாத் விழா போட்டி 2013 அல்குர்ஆன் மனனம் ஆரம்பப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் உயர்தர பாடசாலை தரம்-05 மாணவி செல்வி பழுளுல்லாஹ் பாத்திமா பதீனா மீண்டும் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை கல்முனை மஹ்மூத் பாலிகா உயர்தரப் பாடசாலையில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்வதற்கான போட்டியிலேயே குறித்த மாணவி மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் முன்னாள் இலங்கைப் போக்குவரத்துச் சபை காத்தான்குடிச் சாலை முகாமையாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான மர்ஹூம் ஏ.எல். பழுளுல்லாஹ், காத்தான்குடி நகர சபை உத்தியோகத்தர் பௌஸியா பழுளுல்லாஹ் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

fatheena

Published by

Leave a comment