தேசிய மீலாத் விழா போட்டி 2013 பரிசளிப்பு விழா

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

கல்முனை: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தேசிய மீலாத் விழா போட்டி 2013 மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் அதில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கல்முனை மஹ்மூத் பாலிகா உயர்தரப் பாடசாலையின் சேர் ராசிக் பரீட் மாநாட்டு மண்டபத்தில் கல்முனை மஹ்மூத் பாலிகா உயர்தரப் பாடசாலை அதிபர் எம்.எச்.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி முதல்வர் ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் (ரஹ்மானி) கௌரவ அதிதியாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம், விசேட அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல். ஹாஷிம், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஷேகு அலி, கல்முனை மஹ்மூத் பாலிகா உயர்தரப் பாடசாலையின் ஆசிரியர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளரகள், பிரமுகர்கள், புத்திஜீவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் அல்குர்ஆன் மனனம்,கிராஅத்,ஆங்கில,சிங்கள பேச்சுக்கள்,கட்டுரை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாகாண மட்டத்தில் முதலாமிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பதங்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்தப் பரிசளிப்பு விழாவில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment